தமிழகத்தின் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக நகைக் கடன் தள்ளுபடி பெற்ற, 1,079 அரசு ஊழியர்கள் யார்?,
எந்தத் துறையில் பணிபுரிகிறார்கள் எனும் விபரம் கண்டறியப்பட்டு அவர்களிடம் கடன் தொகை, வட்டியோடு வசூலிக்கப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட, ஐந்து சவரனுக்கு உட்பட்ட தங்க நகைக் கடன் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்கள், கூட்டுறவு வங்கிகள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்பத்தினர் இச்சலுகையைப் பெற முடியாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. தங்களை அரசு ஊழியர்கள் என்பதை மறைத்து, முறைகேடாக, 37 ஆயிரத்து, 984 பேர் பெற்றிருந்த கடன், ரூபாய்.160 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
இது, தமிழக அரசு மேற்கொண்ட தணிக்கையில் கண்டறியப்பட்டதுடன் இவர்கள் யார் ?. எந்தெந்தத் துறைகளில்ல் பணிபுரிகிறார்கள் என்பதையும், அவர்களுக்கான பணி நியமன உத்தரவு எண்ணையும் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்.கோயமுத்தூர் மாவட்டத்தில், 1,079 பேர் நகை கடன் தள்ளுபடி பெற்றிருக்கின்றனர். இவர்களது விபரம் அறிந்ததும், அந்தந்த கூட்டுறவுத் துறை சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டு, பணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. பல ஊழியர்கள், கடன் தொகையை தற்போது செலுத்தி வருகின்றனர்.
கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறுகையில், 'பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள், அதிகாரிகள் பலரும் நகை கடன் தள்ளுபடி பெற்றிருக்கின்றனர். தள்ளுபடி இரத்து செய்யப்பட்டதால், அவர்களிடம் கடன் தொகை வட்டியுடன் திரும்பப் பெறப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடுக்குள் திருப்பி செலுத்தாவிட்டால், அரசின் கவனத்துக்கு தெரிவிக்கப்படும். அந்தந்த துறை வாயிலாக, வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். தங்கள் பதவியை மறைத்து இந்த நகைக் கடன் வாங்கி மோசடி செய்த குற்றத்திற்கு தனி நடவடிக்கை எடுக்க வேண்டும் இது இல்லாமல் மோசடியில் வாங்கிய கடனை மட்டும் திரும்பச் செலுத்தும் படி கூறியதும் ஊழல் முறைகேடு தான் என்பதை ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை நடவடிக்கை எடுக்க அதன் உயர் அலுவலர்கள் அறிவுறுத்தல் வேண்டும் என்பது தான்
கருத்துகள்