சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் ரூ.34.76 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், சென்னையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பு செல்ல இருந்த, திருச்சியைச் சேர்ந்த லட்சுமி கந்தசாமி, கனகவள்ளி சுப்பிரமணி மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாரியம்மாள் சுடலைமுத்து ஆகிய மூன்று பெண் பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையினர் வழிமறித்து சோதனையிட்டனர். இதில், மூன்று பயணிகளும் தங்களது உடலில் தலா100 டாலர் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் (அமெரிக்க டாலர்)மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.34.76லட்சம் ஆகும்.
இது தொடர்பாக, மேல்விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் திரு.கே.ஆர்.உதய் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்