இரயில்வேயின் திருச்சிராப்பள்ளி முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் பல்லவன் ரயில் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு,
"திருச்சிராப்பள்ளியிலிருந்து பல்லவன் விரைவு ரயிலை இயக்க வேண்டுமென்று எங்களுக்கு எவ்விதமான கோரிக்கையும் வரவில்லை. எனவே, திருச்சிராப்பள்ளியிலிருந்து பல்லவன் விரைவு ரயிலை இயக்க வாய்ப்பில்லை" என்றார்.திருச்சிராப்பள்ளி - விழுப்புரம் இரட்டை ரயில் பாதைப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து விட்டன. விழுப்புரம் - தஞ்சாவூர், விழுப்புரம் - நாகப்பட்டினம் ஆகிய இரட்டை ரயில் பாதைப் பணிகள் விரைவில் துவங்க உள்ளன மேலும் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டம், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில், ரூ.115 கோடி வருவாய் ஈட்டியது. நடப்பாண்டு ஏப்ரல் - மே மாதங்களில், ரூ.229 கோடி என வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும், பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும், 2021 ஆம் ஆண்டு ரூ.19.64 கோடி வருவாய் இருந்தது. நடப்பாண்டு, ரூ.68.12 கோடி என வருவாய் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அதன்படி,
ரயில் தண்டவாள விரிசல்கள், தண்டவாள விலகல் கள், ஜல்லிக் குவியலில் கோளாறு போன்ற பிரச்னைகளைக் கண்டறியும், அதிநவீன கண்டுபிடிப்புகளை கண்டிபிடிக்கும் தொழில் முனைவோர்கள் 'ஸ்டார்ட் அப்' என்ற திட்டத்தின் கீழ் வரவேற்கப்படுகின்றனர். ரயில்வே பாதுகாப்பு தொடர்பான, 11 வகைத் தலைப்புகளில், இந்தப் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, தலா 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கொரானா பரவல் காலக்கட்டத்திற்குப் பிறகு ரயில்வே துறையை மேம்படுத்த பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அமல்படுத்த ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளதெனத் தெரிவித்தார்.
கருத்துகள்