தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானதன் படி காலை 10 மணி அளவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பணிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளிட்டார்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனனர். தேர்வர்கள் கீழே கண்டுள்ள இணையதள முகவரி மூலம் தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்று காலை பணிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் அமைச்சர் வெளியிட்டார். அத்துடன் 10 வகுப்பு பொதுத்தேர்வில் 90.07 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். இதற்கான இணைய முகவரி நண்பகல் 12 மணிக்கு மேல் வெளியாகும் எனவும் தெரிவித்ததன் படி, இன்று காலை +2 தேர்வு முடிவுகளை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ஆகிய இணைய தளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானதில் பணிரண்டாம் வகுப்பில் 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியும்
பத்தாம் வகுப்பு: மாணவரை விட மாணவிகள் 8.55% அதிக தேர்ச்சி
பத்தாம் வகுப்பில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி2022 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை 42,000 மாணவர்கள் எழுதுவில்லையென்றும், இது 2019 ஆம் ஆண்டைக் காட்டிலும் 22,000 மாணவர்கள் அதிகமென்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய 9 லட்சத்து 12 ஆயிரத்து 62 பேரில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றனரவர்களில், 6,016 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதியதில், 5,424 பேர் தேர்ச்சி பெற்றவர்களும் அடங்கும். சிறைக் கைதிகளில் தேர்வெழுதிய 242 பேரில், 133 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வெழுதத் தகுதி பெற்றிருந்தவர்களில் 42,519 பேர் மாணவர்கள் தேர்வுக்கே வரவில்லை. இந்த எண்ணிக்கை, கடந்த 2019 ஆம் ஆண்டை விட 22,000 பேர் அதிகமாகும். 2019 ஆம் ஆண்டில் 20,053 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பணிரண்டாம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 89.06 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளன. 246 பள்ளிகள் 100 சதவீதம் பெற்று தேர்வு பெற்றள்ளது.
பணிரண்டாம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர், இதில் மாணவியர் 4 லட்சத்து 21 ஆயிரத்து 622, மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 655. நபர்கள் தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998, இது 93.76 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
இதில் மாணவிகள், 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 , 96.32 சதவீதமும். மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893, 90.96 சதவீதம். மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்
தமிழகத்தில் மொத்தம் 7499 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் பணிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.06 ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.87 சதவீதம், தனியார் பள்ளிகள் 99.15 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் இரு பாலர் பயின்ற பள்ளிகள் 94.05 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 86.60 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 96.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 2628 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 246. பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 85.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 886 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்வு பெற்றள்ளது.
பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 62 பேர். இதில் மாணவியரின் எண்ணிக்கை 4 லட்சத்து 32 ஆயிரத்து 439, மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 120, மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.
இதில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர். தேர்ச்சி சதவீதம் 90.07. இதில் மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர், 94.38 சதவீதம். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920, 85.83 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 12,714 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.25 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.01 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதைத்தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 90.37 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 79.33 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 4,006 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 886 ஆகும்.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், தமிழ் பாடத்தில் ஒருவரும், ஆங்கிலத்தில் 45 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 2186 பேரும், அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 3841 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கருத்துகள்