புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இடையேயான நீடித்த ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையுடன் கையெழுத்திட்ட நீடித்த ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இந்த உடன்படிக்கை ஜனவரி 2022-ல் கையெழுத்தானது.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த பசுமை எரிசக்தி மாற்றம் குறித்த லட்சியம், தலைமைப்பண்பு மற்றும் அறிவாற்றலுக்கு வழிவகுப்பதே இந்த உடன்படிக்கையின் நோக்கம்.
இந்த உடன்படிக்கை, இந்தியாவின் எரிசக்தி மாற்ற முயற்சிகளுக்கு உதவுவதோடு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் உலகிற்கு உதவிகரமாக இருக்கும்.
இந்த உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், 2030-க்குள் இந்தியாவின் நிறுவப்பட்ட புதைபடிமம் - அல்லாத எரிபொருள் சார்ந்த மின் உற்பத்தித் திறனை 500 ஜிகாவாட்டாக அதிகரிப்பது என்ற குறிக்கோளை அடைய உதவிகரமாக இருக்கும்.
இந்த உடன்படிக்கையின் சிறப்பம்சங்கள் வருமாறு:
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தூய்மை எரிசக்தி தொழில்நுட்பத்தை அதிகரிப்பதில் இந்தியாவிலிருந்து அறிவாற்றல் பகிர்தலுக்கு வழிவகுக்கும்
நீண்டகால எரிசக்தி திட்டமிடலுக்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்
இந்தியாவில் கண்டுபிடிப்பு சூழலை வலுப்படுத்த ஒத்துழைக்கும்
பசுமை ஹைட்ரஜன் பரவல் மற்றும் ஊக்கமளிக்கும் வளர்ச்சி வாயிலாக குறைந்த செலவிலான கார்பன் பயன்பாடு இல்லாத நிலையை நோக்கிச் செல்லுதல்
எனவே இந்த நீடித்த ஒத்துழைப்பு உடன்படிக்கை இந்தியாவின் எரிசக்தி மாற்ற முயற்சிகளுக்கு உறுதுணை புரிவதோடு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் உலகிற்கு உதவிகரமாக இருக்கும்.
கருத்துகள்