அக்னிபத் திட்டம் குறித்து நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடம் நேரு இளைஞர் மையம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அக்னிபத் திட்டம் குறித்து நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடம் நேரு இளைஞர் மையம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்
புதிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சீர்திருத்தத் திட்டமான ‘அக்னிபத் திட்டம்’ குறித்த சிறப்பு அம்சங்களை நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதை, நேரு இளைஞர் மையம் ஒரு இயக்கமாக மேற்கொள்வதுடன், இத்திட்டத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
இது குறித்து மத்திய இளைஞர் நலத்துறை செயலாளர் திரு.சஞ்சய் குமார், நேரு இளைஞர் மையத்தின் மண்டல இயக்குனர்கள், மாநில இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட இளையோர் நல அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி, இத்திட்டத்தை பிரபலப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இந்தப் பிரச்சார இயக்கத்தில் இளைஞர் தன்னார்வலர்களை அதிகளவில் திரட்ட பாடுபடுமாறும் நேரு இளைஞர் மையத்தின் கிளை அமைப்புகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள அக்னிபத் திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு அவசியம் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வ உ சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த ஆண்டு விழாவில் கலந்துகொண்டு ஆளுநர் உரையாற்றினார்.
நமது நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தேசத்தலைவர்களை நினைவுகூர்வது நமது கடமையாகும் என்று தெரிவித்தார்.
இளைய தலைமுறையினருக்கு இந்த தியாகங்கள் குறித்து தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
நமது நாடு தன்னுடைய சுயபலத்தை தற்போது உணர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தன்னுடைய தேவையையும் பூர்த்தி செய்து உலகிற்கும் உதவியதை சுட்டிக்காட்டினார்.
2014 ஆம் ஆண்டு 400 ஆக இருந்த இளம் தொழில்முனைவோரின் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று கூறிய அவர், இந்த திட்டத்தில் நான்கு வருடம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுவதால், ஒரு சிறுவனை இளைஞராக உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.இந்திய ஆயுதப்படைகளுக்கு இளைய மற்றும் திறன் பயிற்சிப் பெற்ற பணியாளர்களை உருவாக்குவதை அக்னிபத் ஊக்குவிக்கும்
மத்திய அமைச்சரவையால் செவ்வாய்கிழமையன்று அறிவிக்கப்பட்ட அக்னிபத் திட்டம், நாட்டின் ஆயுதப்படைகளை நவீனப்படுத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, இளைஞர்கள் தேசத்திற்கு சேவையாற்றுவதற்கான வாய்ப்புகளையும் வழங்கவதுடன், இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஆயத்த நிலைக்கு பங்களிப்பை வழங்கக் கூடிய திறன் பயிற்சி பெற்ற பெருமளவிலான இளைஞர்களை உருவாக்கக் கூடியதாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.
அக்னிபத் திட்டத்தில் இணைவதில் மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மிகுந்த பெருமிதம் அடைவதோடு, இளம் இந்தியர்களைக் கொண்ட எதிர்காலத்திற்கு ஏற்ப ஆயத்தமாக இருக்கக் கூடிய ராணுவத்தை உருவாக்கும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆயுதப்படைகளுடன் இணைந்து பணியாற்றும்.
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், தங்களது வேலைக்கான பணிகளுக்கேற்ற கூடுதல் திறன் பயிற்சி பெறும் விதமாக, ஆயுதப்படைகளின்ல் பல்வேறு பிரிவுகளுடன், திறன் இந்தியா இயக்கம் மற்றும் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்படும்.
அக்னி வீரர்கள் பணியில் இருக்கும் போதே, தங்களது வேலையுடன் தொடர்புடைய திறன் பயிற்சி சான்றிதழ்களைப் பெறுவதை உறுதி செய்யும் விதமாக, பயிற்சி பிரிவு தலைமை இயக்குனரகம், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், பல்வேறு துறை திறன் மேம்பாட்டுக் குழுக்கள், தொழில்முனைவோர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகிய திறன் இந்தியாவிற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளும் இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றும்.
கருத்துகள்