பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல்
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தின் இராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைவதையடுத்து, நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜுவை மாதம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது .
பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 29 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். ஆனால் தற்போது எதிர் கட்சிகள் சார்பில் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டதால் நடைபெறும் தேர்தலில் குடியரசுத் தலைவரை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தேர்ந்தெடுப்பர்.
இந்தத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு. அவர் தனது வேட்பு மனுவை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் அதிகாரி பி.சி.மோடியிடம் அவர் வேட்புமனுவை சமர்ப்பித்த போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள நிலையில், திரௌபதி முர்முவின் வேட்பு மனுவை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தயாரித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை 50 பேர் உறுப்பினர் முன்மொழியவும், 50 உறுப்பினர் வழிமொழியவும் வேண்டும். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் திரௌபதி முர்முவை முன்மொழிந்தனர். பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் 50 பேர் வழிமொழிந்தனர்.
முன்னதாக, தேசத் தந்தை மகாத்மா காந்தி, அம்பேத்கர், பிர்ஸா முண்டா உள்ளிட்டவர்கள் சிலைகளுக்கு திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கருத்துகள்