குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் திரு பாகுபாய் படேல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் திரு பாகுபாய் படேலின் மறைவு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார்.
மக்கள் சேவையில் திரு படேலின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூறப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: “குஜராத் முன்னாள் அமைச்சர் திரு பாகுபாய் படேல் மறைவு குறித்து ஆழ்ந்த வேதனையை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் சேவையில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்