சென்னையிலிருந்து விமானத்தில் மதுரை வந்த சிவகங்கை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது
அவர் ஆதீனம் விவகாரம், 2024 மக்களவை தேர்தல், மகளிர் ஊக்கத் தொகை என பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். ஆதீனங்கள் விவகாரத்தில் தமிழ்நாடுஅரசு தலையீடு பற்றிய வினாவுக்கு பதிலளித்த கார்த்தி ப.சிதம்பரம், 'காலங்காலமாக ஆதினம், அரசு, கடவுள், நம்பிக்கை போன்ற விஷயங்கள் சுகமாகத்தானிருந்தது. அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் புதிதாக ஒருவர் சேர்ந்துள்ளார்.அவர் கொள்கை ரீதியாகச் சேர்ந்ததாகத் தெரியவில்லை. அவருடைய கடந்த கால பணியிலிருந்து நீங்கி, அரசியல் கட்சியைத் தேடி அவருடைய சௌகரியத்திற்காக அந்த அரசியல் கட்சியில் சேர்ந்ததால், அதைக் குழப்ப வேண்டும் என்கிற எண்ணத்தோடு சில சம்பவங்கள் நடக்கின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆன்மீகம், அரசியல், நாத்திகம், ஆத்திகம், பெரியார், பிள்ளையார் அனைவரும் சமூகமாக இருந்த ஊர். இந்க்த குழப்பங்கள் பத்திரிக்கையில் வாதமாகலாமே தவிர சமூகத்தில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவராது. எனத் தெரிவித்தார்.
கருத்துகள்