காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் தடுக்க அரை கட்சி குழு டெல்லி செல்லும் திட்டம் முதல்வர் தகவல்
காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தஞ்சாவூரில் தகவல் அளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில்
சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.: "தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுள் ஒன்று காவிரிப் பிரச்சினை. தமிழகத்துக்கான முழு உரிமை காவிரி நீரில் உள்ளது .
எனவே, காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்; வாதாடும்; தனது உரிமையை நிலைநாட்டும் என்பதை முதலில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் தெரிவித்துள்ளார்...
காவிரி நதி பிரச்சினைகள் குறித்து பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் ஒரு தொலைநோக்கு வரலாற்றுப் பார்வை...1892 ஆம் ஆண்டில் முதலில் காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னை உருவான போது, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சிக் காலத்தில் காவிரி நதி நீர் பங்கீட்டு தொடர்பாக முதல் ஒப்பந்தம் உருவாகியதன் படி மெட்ராஸ் மாகாண அரசு அனுமதியின்றி, மைசூர் அரசு, காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டக்கூடாதென முடிவு செய்யப்பட்டது.1900 ஆம் ஆண்டில் கூட மெட்ராஸ் மாகாண அரசின் அனுமதி பெற்றே கர்நாடகா, காவிரியின் குறுக்கே சிவசமுத்திரம் நீர்மின் நிலையம் அமைத்தது.
அதன் பிறகு 1924 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணமும், மைசூர் அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, காவிரி ஆற்றின் குறுக்கே, 1929 ஆம் ஆண்டில் கர்நாடகா அரசு, 45 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட கிருஷ்ண ராஜ சாகர் அணையைக் கட்டியது.
1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி, கர்நாடக அரசு காவிரியின் துணை ஆறுகளான ஹேமாவதி, ஹேரங்கி ஆகியவற்றின் குறுக்கே அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய நீரைத் தடுத்தது. இதுவே தமிழக அரசின் அனுமதியின்றி நடந்த கர்நாடாகவின் முதல் விதிமீறல் நடவடிக்கையாகும்
1924 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கர்நாடகா அரசு ஆண்டு தோறும் தமிழ்நாட்டுக்கு சராசரியாக 575 டி.எம்.சி., தண்ணீர் வழங்க முன் வந்தது.
1924 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்குப்பிறகு 1974 ஆம் ஆண்டில் இரண்டு அரசுகளும் புதுப்பிக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாகக் கூறி கர்நாடகா அரசு அவர்கள் மாநிலத்தில் காவிரியின் பாசனப் பகுதி பரப்பளவை விரிவுபடுத்தியது. காவிரியின் துணையாறுகளின் குறுக்கே புதிதாக பல சிறிய அணைகளைகா கட்டி, காவிரியில் கலக்கும் நீரை தடுத்ததால், தமிழ்நாட்டுக்கு வரும் நீர் வரத்து குறையத் தொடங்கியது. காவிரி நடுவர் நீதி மன்றம், 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம், 25 ஆம் தேதியில் கர்நாடகா ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு, 205 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டுமென, இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்5 ஆம் தேதியில் இறுதித் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் படி தமிழ்நாடு 419 டி.எம்.சி, கர்நாடகா, 270 டி.எம்.சி., கேரளா, 30 டி.எம்.சி., புதுச்சேரி 7 டி.எம்.சி., தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். என்ற நிலையில் அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், 2015 ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசு 25 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது.
2018 ஆம் ஆண்டு மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென, தமிழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முடியாதென காவிரி மேலாண்மை வாரியம் விளக்கமளித்தது.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேகதாது அணை கட்ட அனுமதியே தரவில்ல, தமிழக அரசின் மனு அர்த்தமற்றது, அதனை தள்ளுபடி செய்யவேண்டுமென 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.
மேகதாதுவில் அணை கட்டி 66 டிஎம்சி தண்ணீரை தேக்கினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீரே வராது, தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடுமென திமுக அரசு தெரிவித்தது.
கடந்த மே மாதம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை அனுமதியின்றி கட்டப்படுகிறதா என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியதுடன் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குதீ தொடர 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அந்த உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து கடந்த 2 வாரங்களாக தமிழ்நாட்டின் நீர்ப்பாசனம் குறித்து கவலை கொண்ட நிலையில் செய்தியாகிறது
மேகதாது அணை விவகாரம். இது குறித்து மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்டக் குழு உறுப்பினரும், மதுரை நவீன நீர்வழிச்சாலை தலைவருமான
ஏ.சி.காமராஜ் தனது கருத்தை தெரிவித்தார்:
"எப்போதும் ஒரு ஆற்றில் வருகின்ற நீரில் அதன் கீழே உள்ள டெல்டா பகுதிகளுக்குத் தான் முதல் உரிமை என்று உலகளாவிய சட்டமான ரைப்பேரியன் ரைட் சொல்கிறது. அதன்படி பார்த்தால், தமிழகம் சம்மதித்தால் தான் கர்நாடக அரசு அங்கு அணை கட்ட முடியும். இல்லாவிட்டால், அணை கட்ட அவர்களுக்கு உரிமை கிடையாது. எனவே, ரைப்பேரியன் சட்டத்தை முன்னிறுத்தி, அதன்படி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதைத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். ( இது ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் உள்ள பிரச்சினை தீர்க்கப்பட உதவும் ஒரே நாட்டில் உள்ள இரண்டு மாநிலத்தில் இது சாத்தியமாகிறது என்பதே நமது பார்வை) 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உலகலாவிய சட்டம் இது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடகம் தமிழகத்துக்கு 192 டிஎம்சி வழங்க வேண்டும். ஆனால், 2018 ஆம் ஆண்டு கர்நாடக அரசு பெங்களூரு குடிநீர்த் தேவையைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், கர்நாடகாவுக்கு 280.75 டிஎம்சி, தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி (14.5 டிஎம்சி குறைவாக) வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த குறைக்கப்பட்ட தண்ணீரைக் கேட்டுப் பெற தமிழக அரசு சட்டப் போராட்டம் தொடங்க வேண்டுமென விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் தற்போது இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
கருத்துகள்