ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆப்கானிஸ்தானில் இன்று நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம் பற்றிய செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. விலைமதிப்பற்ற உயிர் இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
இந்த கடினமான தருணங்களில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். முடிந்த அளவு அனைத்து பேரிடர் நிவாரண பொருட்களையும் விரைவில் வழங்க இந்தியா தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.
கருத்துகள்