உச்ச நீதிமன்றத்தில் விவாதங்கள் நடந்து வந்த போது மகாராஷ்டிரா சட்டமன்ற அமைச்சரவையின் கூட்டமும் நடந்ததில் ஒளரங்காபாத் நகரத்திற்கு சாம்பாஜி நகர் என்றும், ஒஸ்மனாபாத் நகரத்திற்கு தாராசிவ் எனப் பெயர் மாற்றம் செய்யவேண்டுமென அமைச்சர் அனில் பரப் கேட்டுக்கொண்டது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தவுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே இணைய வழியில் உரையாற்றினார்.
"எனது முதல்வர் பதவி மற்றும் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியாகிய இரண்டையும் இராஜினாமா செய்கிறேன். நான் எதிர்பாராமல் ஆட்சிக்கு வந்தேன். அதே போன்று ஆட்சியிலிருந்து செல்கிறேன். நான் எங்கேயும் போய்விடவில்லை. இங்குதான் இருக்கிறேன். சிவசேனா பவனில் அமருவேன். எனது ஆட்களைக் கூட்டுவேன். எனக்கு ஆதரவளித்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பதவியை விட்டு விலகுவதற்காக நான் வருத்தப்படவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை திரும்ப சிவசேனாத் தொண்டர்கள் அனுமதிக்க வேண்டும். போராட்டமெதுவும் நடத்த வேண்டாம். சிவசேனா மற்றும் பால் தாக்கரேயால் வளர்ச்சியடைந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கரேயின் மகனை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியதற்காக மகிழ்ச்சியடையட்டும்". எனத் தெரிவித்தார். இந்த நிலையில் சபாநாயகர் கொடுத்த அறிவிக்கை தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என 16 சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதன் படி ஜூலை மாதம் 12 ஆம் தேதி வரை சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டமன்றத்தில் 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் படி சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநர் பகத்சிங் கோஷாரியா உத்தரவிட்டார். அதை எதிர்த்து சிவசேனா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், பி.பார்த்திவாலா அடங்கிய அமர்வு, வியாழக்கிழமை சட்டமன்றத்தில் நடக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட காரணமாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்குமென்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தனது முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்
அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சூரத் அல்லது கௌஹாத்தி செல்லாமல் நேரடியாக தன்னிடம் வந்து கருத்தைத் தெரிவித்திருக்கலாம். சிவசேனா சாமானிய மக்களின் கட்சி. பல சவால்களைச் சந்தித்து வெற்றி பெற்றுள்ளது. சிவசேனாவை மீண்டும் புதிய பொழிவுடன் உருவாக்குவோம்” என முதல்வர் கூறியுள்ளார் அதன் பின்னர் உத்தவ் தாக்கரே ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் பகத்சிங் கோஷாரியாவைச் சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். உத்தவ் தாக்கரே பதவி விலகியதால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் அரசு இன்று அல்லது நாளை பதவியேற்குமென்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அஸ்ஸாமிலிருந்த சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று யூனியன் பிரதேசமான கோவா வந்தனர். இன்று மும்பை திரும்புகின்றனர். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்ளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கருத்துகள்