தமிழ்நாடு முழுவதும் ‛ஆபரேஷன் கந்துவட்டி' என்ற பெயரில் தீவிர நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை இயக்குனர் சுற்றறிக்கை
முறையான அனுமதி உரிமம் பெறாமல் வட்டித் தொழில் செய்யும் நபர்கள் அணைவரும் கந்து வட்டிக்காரர்கள் தான். கந்துவட்டி கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு முழுவதும் ‛ஆபரேஷன் கந்துவட்டி' என்ற பெயரில் தீவிர நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஆனையர்களுக்கு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவு.
கடலூரைச் சேர்ந்த செல்வக்குமார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வருகிறார். குடும்ப செலவுக்காக தனிப்பட்ட ஒரு பெண்ணிடம் ரூபாய்.ஐந்து லட்சம் கந்து வட்டி தருவதாக ஒப்புக் கொண்டு கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்திவிட்டதாகவும், ஆனால் அந்த பெண் மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த காவலர் செல்வகுமார் கந்துவட்டிக் கொடுமையால் மனம் பேதளித்த நிலையில் விஷத்தால் தற்கொலை செய்துக்கொண்டார். இது தொடர்பாக அந்தப் பெண் அனிதா கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.அதனடிப்படையில்,
தமிழ்நாட்டில் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு கந்துவட்டி பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதில், ‛‛கந்துவட்டி தொடர்பான வழக்குகளை கையாள ‛ஆபரேஷன் கந்துவட்டி' என்ற சிறப்பு இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையிலுள்ள கந்துவட்டி வழக்குகளை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கையெழுத்து வாங்கப்பட்ட வெற்று காகிதங்கள், சட்டவிரோத ஆவணங்களைப் பறிமுதல் செய்ய வேண்டுமென அவர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்