திரைப்படம் என்பது ஒவ்வொரு தனிமனிதனுடைய பிறப்புரிமை: ரிஸ்வான் அஹமத்
கொவிட்-19 பெருந்தொற்று உலகம் முழுவதுமுள்ள சினிமா ரசிகர்களை இணையதளத்தில் திரைப்படம் பார்ப்பதை துரிதப்படுத்தியுள்ளது. தொற்றுநோயின் பயம், மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி செய்ததால், ஓடிடி தளங்களில் திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், ஓடிடி தளங்களில் படம் பார்ப்பதால், திரையரங்குகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனவா என்ற கேள்விகளுக்கு, ஹைதராபாத் மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக பயிற்றுவிப்பு ஊடகமைய இயக்குநர் ரிஸ்வான் அஹமத் விளக்கமளித்துள்ளார்.
உலகில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனின் பிறப்புரிமை சினிமா என்று ரிஸ்வான் அஹமத் தெரிவித்தார். உலகின் பல பகுதிகளில், சினிமாவை வேறு தளங்களுக்கு மாற்றுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், இந்தியாவில் 47 சதவீத மக்களுக்கு மட்டுமே இணையதள வசதி உள்ளது என்றும் ரிஸ்வான் கூறினார். ஒதுக்கப்பட்ட கிராமப்புற மக்களை ஓடிடி தளங்கள் மூலம் சினிமா சென்று சேர புதிய வழிமுறையுடன் கூடிய வணிக மாதிரியை உருவாக்க வேண்டும் என்று ரிஸ்வான் குறிப்பிட்டார்.
ஓடிடி தளங்களால் தியேட்டர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை மறுத்த ரிஸ்வான், தியேட்டர்களில் சினிமா பார்க்கும் இனிய அனுபவத்தையும், கொண்டாட்டத்தையும் ஓடிடி தளங்களால் தர முடியாது என்று ரிஸ்வான் தெரிவித்தார்.
தியேட்டர்களுக்கு வரும்படி மக்களை கவருவதற்கான புதுமையான உத்திகள், அணுகுமுறைகளை திரையரங்க உரிமையாளர்கள் கண்டறிய வேண்டும் என்று ரிஸ்வான் கேட்டு கொண்டார்.
கருத்துகள்