கேகே என்று பிரபலமாக அறியப்பட்ட சிறந்த பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
கேகே என்று பிரபலமாக அறியப்பட்ட சிறந்த பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பாடல்கள் அனைத்து வயதினருக்கும் விரிவான உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருந்தன என்று திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“கேகே என்று பிரபலமாக அறியப்பட்ட சிறந்த பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மரணத்தால் துயரடைந்தேன். அவரது பாடல்கள் அனைத்து வயதினருக்கும் விரிவான உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருந்தன. அவரது பாடல்கள் மூலம் எப்போதும் அவரை நாம் நினைவுகூர்வோம். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி
கருத்துகள்