தென்னக ரயில்வேயில் கோயமுத்தூரிலிருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் போக்குவரத்து
ஜூன் மாதம் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வடக்கு கோயமுதூரிலிருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளது. கோயமுத்தூரைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம் இந்த ரயிலை இயக்கவுள்ளது.
இரயில் இஞ்சின் மற்றும் பெட்டிகள் தண்டவாளம் சிக்னல் நிலையம் நடைமேடை ரயில்வேக்கு சொந்தம் ரயில்வே டிரைவர் மற்றும் காட் வண்டியை இயக்குவார்கள் அரசு ஊழியர்கள் ஆனால் டிக்கெட் விற்பனை பயணிகளைப் பரிசோதிப்பது உள்ளிட்ட அனைத்தும் அதாவது வருமானம் மட்டும் தனியாருக்கு இயக்கம் ரயில்வே உடையது டிக்கெட் விற்பனை தனியாருக்கு கட்டணம் அவர்கள் விருப்பம் போல் வைத்துக்கொள்ள அனுமதி !சீரடிக்கு செல்ல விரும்பும் பக்தர்களைச் சுரண்டும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது
கோயமுத்தூரிலிருந்து சீரடிக்கு செல்ல 1458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கிளாஸ் அதாவது படுக்கை வசதிக்கான கட்டணம் 1280 ரூபாய் .ஆனால் அவர்கள் வசூலிப்பது .2500 ரூபாய் .மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூபாய் 2360. தனியார் கட்டணம் ரூபாய் 5000. குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 4 ஆயிரத்து 820 ரூபாய். ஆனால் தனியார் கட்டணம் 7000 ரூபாய். குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூபாய் 8 ஆயிரத்து 190 .தனியார் கட்டணம் 10000 ரூபாய். அதாவது ஸ்லீப்பர் கட்டணம் ரெண்டு மடங்கு. குளிர்சாதன படுக்கை மூன்றடுக்கு இரண்டடுக்கு ஆகியவை ஒன்னரை மடங்கு. முதல் வகுப்பு ஒண்ணேகால் மடங்கு. கட்டணக் கொள்ளை துவக்க நிலையிலேயே துவங்கி விட்டது.
தனியாருக்கு உரிமை கட்டணம் முன்பு 40 லட்சம் என்று தீர்மானித்து பின்னர் அதிலும் பதினோரு லட்சம் குறைத்து வசூலிப்பது ரயில்வேயின் வருமானத்தை பாதிக்கவில்லையா என்ற வினா அறிவார்ந்த மக்கள் எழுப்பும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர் சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரயில்வேயை தனியாரிடம் விடக்கூடாது என்று வலியுறுத்தி வரும் நிலையில். ரயில்வே அமைச்சர் அண்மையில் சென்னை வந்திருந்த போது ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்று சொன்ன நிலையில் ஆனால் அதற்கு மாறாக முதல் தனியார் ரயிலை தமிழகத்திலிருந்தே இயக்குவது பலரது எதிர்ப்பை பெற்றுள்ளது தனியார் ரயில் என்றால் ஒரு கட்டண சலுகையும் கிடையாது .ஏன் முதியோர் கட்டண சலுகையும் கிடையாது .அது மட்டுமல்ல ரயில்வேயை போல ஒன்றரை மடங்கு முதல் 2 மடங்கு வரை கட்டணம் உயர்வு. இதுதான் தனியார்மயம். இந்த வண்டியில் டிக்கெட் பரிசோதகர்கள் தனியார் பரிசோதகர்கள். தனியார் வண்டி ஆனால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இந்த நிலையில் இந்திய ரயில்வே தேசிய ரயில் திட்டம் அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து லாபம் வரும் பயணிகள் வண்டிகளும் தனியாருக்கு 2031 ஆம் ஆண்டுக்குள் வழங்க்கப்பட உள்ளதும். அனைத்து சரக்கு ரயில்களும் 2031 ஆம் ஆண்டிற்குள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் நிலையில். தனியாருக்கு தாரை வார்த்தால் கட்டணங்கள் உயரும் , சலுகைகள் பறிபோகும் என்பதன் எடுத்துக்காட்டு தான் தற்போது வரும் கோயமுத்தூர் சீரடி தனியார் ரயில் போக்குவரத்து.
எனவே கோவை- சீரடி ரயிலை ரயில்வே நிர்வாகம் உலகின் முதல் பெரும் பொதுத்துறையான இந்திய இரயில்வேயின் இந்த தனியார்மய நடவடிக்கை இன்னும் சில மக்கள் உண்மை உணராத நிலையில் வரும் காலங்களில் உண்மை தெரிய ஊமையின் நிலைதான்.தமிழ்நாட்டில் முதல்முறை தனியார் ரயில் போக்குவரத்து கோயமுத்தூர் எம் அண்ட் சி என்ற நிறுவனம், கோயமுத்தூரிலிருந்து ஷீரடிக்கு தனியார் ஆன்மிகச் சுற்றுலா ரயிலை 2022 மே மாதம் 17ஆம் தேதி முதல் இயக்குகிறது.
கோயமுத்தூரிலிருந்து ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்த்ராலயம் வழியாக ஷீரடிக்கு செல்லும் பயணத்தில், ஒரே கட்டணத்தில் 4 நாட்களுக்கான உணவு மற்றும் ரயில் பயணத்துக்கு தேவையான படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வை, கிருமி நாசினி உள்ளிட்ட தினசரி பயன்பாட்டுப் பொருட்கள், ஷீரடியில் போக்குவரத்து வசதி, சாய்பாபா ஆலயத்தில் தரிசனத்துக்கான கட்டணமென வழங்கப்படும்.
இரண்டு அடுக்கு ஏசி வசதிகளைக் கொண்ட வாராந்திர ரயில், செவ்வாய்க்கிழமை கோயமுத்தூரிலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை மாலை ஷீரடி சென்றடையும். வியாழக்கிழமை சாய்பாபா ஆலயத்தில் தரிசனம் முடித்த பிறகு அன்று மாலை புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதே வழியில் கோயமுத்தூர் வந்தடையும். ரயிலில் அவசர மருத்துவத் தேவைகளுக்காக ஒரு மருத்துவர் ரயிலில் பயணிப்பார். பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சேவை அதிகாரி மற்றும் உதவியாளர்களும் பயணிப்பர். மந்த்ராலயம் மற்றும் ஷீரடியில் அனுபவமிக்க கைடுகள் அல்லது வழிகாட்டிகள் மூலம் பயணிகளுக்கு வழி காட்டப்படுமென நெரிக்கும் பட்டுள்ளது.
கருத்துகள்