சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஒன்பது பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஒன்பது பேர் உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாகவும், ஒரு கூடுதல் நீதிபதிக்கு மேலும் ஆறு மாத காலத்திற்கு பதவி நீட்டிப்பும் வழங்கி குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும்,
1) திரு கோவிந்தராஜூலு சந்திரசேகரன்
2) திரு வீராசாமி சிவஞானம்
3) திரு கணேசன் இளங்கோவன்
4) திருமதி ஆனந்தி சுப்பிரமணியன்
5) திருமதி கண்ணம்மாள் சண்முக சுந்தரம்
6) திரு சத்தி குமார் சுகுமார குரூப்
7) திரு முரளி சங்கர் குப்புராஜ்
8) திருமதி மஞ்சுளா ராமராஜூ நல்லய்யா
9) திருமதி தமிழ்செல்வி டி.வளையபாளையம்
ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு கூடுதல் நீதிபதியான திரு ஏ ஏ நக்கீரன் 03.12.2022 வரை தொடர்ந்து கூடுதல் நீதிபதியாக இருப்பார் என்று மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்