மத்திய அறிவியல்- தொழில்நுட்பத்துறை, சிங்கப்பூர் வர்த்தக - தொழில் துறையுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புத் துறைகளில் மத்திய அறிவியல்- தொழில்நுட்பத்துறை, சிங்கப்பூர் வர்த்தக - தொழில் துறையுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புத் துறைகளில் மத்திய அறிவியல்- தொழில்நுட்பத்துறை, சிங்கப்பூர் வர்த்தக - தொழில் துறையுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி 2022-ல் கையெழுத்தானது.
புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், மனிதவள பயிற்சி, ஒத்துழைப்புகள் மூலம் ஐ.பி. உற்பத்தி மேற்கொள்ள வழிவகுக்கும் நடைமுறையை வழங்குவதோடு, இருநாடுகளிலும் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு திறனை உருவாக்க உதவும்.
வேளாண்மை மற்றும் உணவு அறிவியல் & தொழில்நுட்பம்;
அதிநவீன உற்பத்தி மற்றும் பொறியியல்;
பசுமைப் பொருளாதாரம், எரிசக்தி, தண்ணீர், பருவநிலை மற்றும் இயற்கை வளங்கள்;
தரவு அறிவியல், பொறியியல் தொழில்நுட்பங்கள்;
அதிநவீன சாதனங்கள்; மற்றும்
சுகாதாரம் மற்றும் உயிரி தொழில்நுட்பம்
உள்ளிட்ட ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு போன்றவற்றில் முன்னேற்றத்தை விரைவுபடுத்தக் கூடிய பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ள இந்த ஒப்பந்தத்தின்படி முன்னுரிமை அளிக்கப்படும்.
கருத்துகள்