குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு பணியில்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், பிரபுல் படேல், சமாஜ்வாடி கட்சியின் சார்பில் அகிலேஷ் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தேவகவுடா, குமாரசாமி, தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில்
குடியரசுதா தலைவர் தேர்தலில் போட்டியிட சரத்பவாருக்கு விருப்பமில்லை எனக் கூறிவிட்டவே அவரைச் சம்மதிக்க வைக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிற்பதற்கு சரத் பவார் மறுப்பு தெரிவிக்கவே. அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதென தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் ஆகிய 3 தலைவர்கள் அடங்கிய குழு அடுத்த கூட்டம் குறித்து முடிவெடுக்குமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்த முடிவெடுத்த சரத் பவார் விலகிய நிலையில், அடுத்த தேர்வில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளவர், எல்லாக் கட்சிகளாலும் ஆதரிக்கப்படக் கூடியவராக இருக்க வேண்டிய அவசியம் காரணமாக இந்தத் தேர்வில் பலகட்ட ஆலோசனைகள் வேகமாக நடைபெறுகிறது.மேற்கு வங்காள முன்னாள் ஆளுநரும் மஹாத்மா காந்தி பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் கோபாலகிருஷ்ண காந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியதாகவும், அப்போது அவர் தனக்கு யோசிப்பதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும், விரைவில் தனது முடிவைக் கூறுவதாகத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் "டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக எனது பெயரைப் பரிந்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். எனினும் எனது வேட்புமனுவின் முன்மொழிவை நான் பணிவுடன் நிராகரித்து விட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சாமானியர்களின் நல்வாழ்வுக்காக எனது சேவையை தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்". என் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தகவல் தெரிவித்தார்.
கருத்துகள்