பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகப் புதிய பொறுப்பேற்ற டாக்டர் அன்புமணி ராமதாஸ், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்,
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களை நேரில் சென்று சந்தித்துப் பேசினார். அந்த வகையில் இந்தச் சந்திப்பிற்கு பிறகு டாக்டர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது '2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும். அதில் எங்கள் கட்சியின் இலக்கு பாமக ஆட்சிக்கு வரவேண்டும். அது தனிப்பட்ட ஆட்சியாக இருக்காது. கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியாகத் தான் இருக்கும்.
பா.ம.கவை போல ஒருமித்த கருத்துக் கொண்ட கட்சிகளை நாங்கள் அணுகுவோம்' எனத் தெரிவித்துள்ளார். கடந்த 2016 தேர்தலில், முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய டாக்டர் அன்புமணி ராமதாஸ், 2021 ஆம் ஆண்டில் கூட்டணியமைத்து போட்டியிட்டபோது முதல்வர் முழக்கத்தை கைவிட்டார். இந்நிலையில் பாமக வில் புதிய தலைவராகி இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இது பா.ம.க 2.0 எனக் கூறி கூட்டணி ஆட்சி அமைப்போம் என தற்போது கூறியிருக்கிறார். பா.ம.க தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறியிருப்பதன் மூலம் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அன்புமணி முன்னிறுத்தப்படுவார்
இதனால் அவர் எந்தக் கட்சி கூட்டணியிலும் சேருவதற்கு வாய்ப்பில்லை. கட்சி 7 சதவீதம் இருந்த வாக்குவங்கி தற்போது 1.5 சதவீதமாக குறைந்த நிலையில் கட்சி வடமாநிலங்களில் சேலம் தர்மபுரி விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் உள்ளது போல் மற்ற பகுதிகளில் தேய்மானம் அடைந்து போன நிலையில் இவரது திட்டம் நிறைவேறுமா என்பதும். மேலும் இதில் ஜாதி மட்டுமே கை கொடுக்குமா என்பதும் தற்போது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விவாதமாக இனி கட்சி முன்னெடுத்துச் செல்ல உள்ள போராட்டம் தான் இவர் வார்தைகள் மூலம் வழி நடத்தும் கட்சி மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கையாகும்.
கருத்துகள்