உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மணிஷ் நர்வால் மற்றும் ரூபினா ஃபிரான்ஸிசுக்கு பிரதமர் வாழ்த்து
பிரதமர் அலுவலகம் ஃபிரான்சின் ஷத்துஹுவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மணிஷ் நர்வால் மற்றும் ரூபினா ஃபிரான்ஸிசுக்கு பிரதமர் வாழ்த்து
ஃபிரான்சின் ஷத்துஹுவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மணிஷ் நர்வால் மற்றும் ரூபினா ஃபிரான்ஸிசுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “#Chateauroux2022 இல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு போட்டியில் தங்கம் வென்ற மணிஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோரால் பெருமிதம் கொள்கிறேன்.
இந்த சிறப்பான வெற்றிக்காக அவர்களுக்கு வாழ்த்துகள். அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்
கருத்துகள்