நாட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளி வீர முத்தரையர் சங்கத்தின் பொறுப்பாளரான கே.கே.செல்வக்குமார்
நாட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளி வீர முத்தரையர் சங்கத்தின் பொறுப்பாளரான கே.கே.செல்வக்குமார்
திருச்சிராப்பள்ளி புதுக்கோட்டை சாலையிலுள்ள எம்ஐடி சோதனைச்சாவடியில் கடந்த 20.ஜூலை.2022 ல் வாகன சோதனையின் போது ஒரு காரிலிருந்து பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டநிலையில் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்றதான வழக்கில் முக்கியக் குற்றவாளி முதல் நபர் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கேகேஎஸ்.செல்வகுமார் என்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரை தேடப்படும் குற்றவாளியாக திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறை அறிவித்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:- திருச்சிராப்பள்ளி புத்தூர் நான்கு ரோட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.என்பவரது மகன் திலீப் (வயது 34). இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சிராப்பள்ளி மாவட்ட இளைஞரணி யின் அமைப்பாளராக இருப்பதாகவும் இவருக்கும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த சிலருக்குமிடையே முன்விரோதமிருந்து வந்ததாகத் தெரிகிற நிலையில், கடந்த 20 ஆம் தேதி இரவு திலீப் திருச்சிராப்பள்ளியிலிருந்து இலால்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட்டையடுத்த அகிலாண்டபுரத்தின். அருகில் சென்றபோது அங்கே நின்று கொண்டிருந்த ஐந்து நபர்கள் கொண்ட கும்பல் கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் கார்க் கண்ணாடி உடைந்தது.
திலீப் உயிர் தப்பினார். இதுபற்றிய தகவலறிந்த திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், லால்குடி துணைக் கண்காணிப்பாளர் சீதாராமன், சமயபுரம் காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுமிடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். அதையடுத்து திலீப் கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ், சார்பு ஆய்வாளர் வாசுதேவன்
சமயபுரம் காவல் நிலைய குற்ற எண் 163/ 2022 ன் படி முதல் குற்றவாளியாக கே.கே.செல்வக் குமார் பெயர் சேர்க்கப்பட்டு. வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 28), மாமுண்டி மகன் சுரேஷ் என்ற தாயுமானவன் (வயது 21), செந்தில்குமார் (வயது 42), ஸ்ரீரங்கம் கீழவாசல் ரெட்டியார் தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகன் நந்தகுமார் (வயது 25), வினோத் என்ற ஹரிஹரன் (வயது 25) ஆகிய ஐந்து பேரைக் கைது செய்தனர்.அதில் குற்றவாளியாக உள்ள நபரான தமிழ்நாடு வீர முத்தரையர் சங்கத்தின் தலைவராக உள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே செல்வக்குமார் தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை தரப்பில் தகவல் மேலும் இதேபோல் ஏற்கனவே திருச்சிராப்பள்ளியில் முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன், என்ற ஆர்.வி.அவரது மகன்கள், மருமகன்கள் கைதாகி ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் திருச்சிராப்பள்ளியில் வீர முத்தரயைர் பேரவையைச் சேர்ந்த கே.கே.செல்வகுமார் என்பவரது வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து செல்வகுமார் எடமலைப்பட்டி காவல் நிலையத்தில் அப்போது அளித்த புகாரின் பேரில் தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்ற சங்க தலைவர் ஆர்.வி என்ற ஆர்.விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறை கைது செய்த சம்பவம். கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் திருச்சிராப்பள்ளி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேரையும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அந்த ஐந்து பேரும் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாதியின் பெயரைப் பயன்படுத்தி தங்கள் சுயநலத்திற்காக கலவரம் செய்யும் இவர்களைப் போன்ற சமூகத்தில் உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கருத்துகள்