சீனியர் கௌன்சிலும் ஆறு சீக்ரெட் பாயின்ட்களும் !
சட்டம் தெரியாத எடப்பாடி கே.பழனிச்சாமியும் தொண்டர்கள் பலமில்லாத ஓ.பன்னீர்சொல்வமும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடந்த அஇஅதிமுக பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு படி அவமதிப்பு வழக்கும் மற்றும் உச்சநீதிமன்றத்தில் கேவியட்ர் மனுவும் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் அதற்கு பதிலாக மேல்முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.
இது போக அவைக்குழு, பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரை தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி தேர்தல் ஆணையத்தில் உரிமை மசோதாவும் தாக்கல் செய்துள்ளார் ஓ பன்னீர்செல்வம். இது போக எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த வாரத்தில் வந்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டில் தன்னுடைய வாதத்தைக் கேட்காமல் தடையுத்தரவு எதுவும் வழங்கக்கூடாதென்று கேவியட் மனுவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்துள்ளார்
ஓ.பன்னீர்செல்வம் முறையாக சட்ட ஆலோசனைகளைப் பெற்று செயல்படுகிறார். இதன் உள் அர்த்தம் ஓ.பன்னீர்செல்வம் பெரிய சட்ட போராட்டத்திற்குத் தயாராகிவிட்டார் என்பதே.மற்றொரு பக்கம் எடப்பாடி கே.பழனிசாமி 10 மணி நேரத்திற்கு மேல் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். முதல் நாள் 5 மணி நேரமும், நேற்று 5 மணி நேரமும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதிலுள்ள சாதக மற்றும் பாதக நிலை ஓ.பன்னீர்செல்வம் அனுமதியில்லாமல் எப்படி பொதுக்குழுவைக் கூட்டுவது, எப்படி பொதுச்செயலாளர் மசோதாவைக் கொண்டு வருவது என்பது உள்ளிட்ட விதிகளை ஆலோசனை செய்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் எந்த விதமான வழக்குகளைத் தொடுப்பார், அதை எப்படிச் சமாளிப்பது எனவும் ஆலோசனை செய்துள்ளார். உயர் நீதிமன்ற வழக்கில் கடைசி நேர்தத்தில் அஇஅதிமுகவின் ஒற்றைத் தலைமைத் தீர்மானத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தது. என்ன நடந்தாலும் வரைவு தீர்மானத்தை ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் கூறியது. இதுதான் தற்போது எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு முன்னால் இருக்கும் சட்ட சிக்கல். கடந்த முறை உயர் நீதிமன்றத்தில் வந்த இந்த தீர்ப்பால் தனது சட்ட ஆலோசனை குழுவிடம் எடப்பாடி கே.பழனிச்சாமி கோபமாக உள்ள தகவல் வருகிறது.. பொதுக்குழுவில் அவசரப்பட்டு எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு 23 தீர்மானங்களையும் நிராகரித்ததனால் பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனத் தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது.
இதன் அர்த்தம் பொதுக்குழு காலாவதியாகி விட்டது. அதாவது சட்டப்படி பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் இல்லை.. அதனால் பொதுக்குழுவும் இல்லை. நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மட்டும் இந்தக் குறிப்பு வைத்தால்.. ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழுவே கூட முடியாத நிலை ஏற்படும்.அவசரப்பட்டு அவைத்தலைவர் தேர்வு செய்தது. இந்தத் தீர்மானங்கள் 23 ல் ஒன்றாக இல்லாத நேரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்தின் முழுமையாக அவமதிப்பாகும். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இந்தக் குறிப்பை வைத்து வழக்கும் தொடுத்துள்ளார்.
எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு உயர் நீதிமன்ற விதிகளை மதிக்காமல் இப்படிச் செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சின்ன தவறு எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எதிராக வேறு விதமாகவும் திரும்பியுள்ளது. எடப்பாடி கே.பழனிச்சாமி, சிவி சண்முகம், டி.ஜெயக்குமார் உள்ளிட்ட ஆறு நபர்களின் பொதுக்குழுப் பதவிகளைப் பறிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அவமதிப்பு வழக்கில் குறிப்பிட்டுள்ளது. இதுவும் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பிற்கு எதிராகியுள்ளது. ஒருங்கிணைப்பாளராக இருக்கும் போதே.. தலைமைக் கழக செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தலைமைக் கழகத்தின் கூட்டத்தைக் கூட்டியது எப்படி என்ற வினா எழுந்துள்ளது. இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையம் சென்றுள்ளது. இதனால் கடந்த நாட்களில் நடந்த தலைமைக் கழகக் கூட்டத்திற்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றவே தடை விதிக்கப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு நடத்தத் தடை இல்லை. இதனால் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தி அதை நீதிமன்றத்தில் காட்டி தீர்மானத்திற்கு அனுமதி பெற்றிருக்கலாம். ஆனால் எடப்பாடி கே.பழனிச்சாமி அந்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டுவிட்டார். ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் போது.. எப்படி அவைத்தலைவர் பொதுக்குழுவை கூட்ட முடியும். என்ன அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகிவிட்டால். கூடவே பொதுக்குழுவில் பதவியும் காலியாகிறது என்று தானே அர்த்தம் (எல்லாம் ஒரே தீர்மானம் என்பதால்) .
ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்குமென்ற அறிவிப்பே சட்ட ரீதியாகச் செல்லுபடியாகாத நிலையில். எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கண்டிப்பாகத் தொண்டர்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது.
ஆனால் அமைப்புச் சட்டம் துணை விதிகள் மற்றும் நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவு என அணைத்தும் என்னவோ ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் பக்கம் சாதகமான நிலையில் இருக்கிறது.
இதுவே தற்போதைய நிலையில் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு. பணம் செலவு செய்தாலும்
ஓத்தைத் தலை பதவி பெறுவது என்பது நடக்குமா என்பதே நமது எழுவினா அதை வரும் நாட்களில் உணரலாம்.
கருத்துகள்