இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில்,
அடுத்ததாக குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கு ஜூலை மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இச் சூழலில் நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில் 48.9 சதவீத வாக்குகளை பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கொண்டுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பிற மாநிலங்களின் கட்சிகள் 51.1 சதவீதம் கொண்டுள்ளன. மொத்த வாக்குகளின் மதிப்பான 10,86,431 ல் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலான் வாக்கு வங்கி மதிப்பு 5,25,706. பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இப்படி பலம் வாய்ந்த பாரதிய ஜனதா கட்சியை வெல்வதற்கு அகில இந்திய அளவில் புதிய ஒருங்கிணைந்த கூட்டணியை உருவாக்கி, எதிர்க்கட்சிகள் அணைத்தும் ஒரே அணியாகத் திரட்டினால் மட்டுமே அது பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான வலுவான அணியாக இருக்க முடியுமென
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும் தெலுங்கானா முதல்வருமான டாக்டர் சந்திரசேகர ராவ் கருதுகிறார். நாடு முழுவதுமுள்ள 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடிதமெழுதியுள்ளார். டெல்லி, கேரளா, தமிழ்நாடு, ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சித் தலைவர்களைத் தொடர்பு கொண்டு பேசியும் வருகிறார். தமிழ்நாட்டின் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி போன்றோருடன் சோனியா காந்தி தொடர்பு கொண்டிருப்பதாகவும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இவர் திரிணாமுல் காங்., சிவசேனா, மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிகிறது. பஞ்சாப் மற்றும் டெல்லியில் ஆட்சியிலுள்ள ஆம் ஆத்மி கட்சியுடனும் காங்கிரஸ் கட்சி பேசி வருகிறது. வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால், பாரதிய ஜனதா கட்சியின் பலம் அதிகமாக உள்ளது. சுமார் 20 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகத் தேவைப்படுவதால் பாஜக முன்னிறுத்தும் குடியரசு தலைவருக்கான வேட்பாளரே வெற்றிபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.இருந்தாலும் .பல அரசியல் காரணங்களால் பொது வேட்பாளராக முக்கிய தலைவர் ஒருவர் களம் காணலாம்.நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஜார்கண்ட் மாநில கவர்னர் திரௌபதி மர்மு ஆகியோரில் துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவுக்கே குடியரசுத் தலைவராக வாய்ப்புள்ளதாகவும் அவர் போட்டியிட்டால் திமுக ஆதரவளிக்கும் நிலை உள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் மற்றும் 'குஜராத் மேலிடத் தலைவர்கள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு வாய்ப்பளிக்க விரும்பவில்லை எனக் கூறப்படும் நிலையில் ஆர் எஸ் எஸ் முன் எடுக்கும் நபரே தேர்வாக வாய்ப்புக்கள் உள்ளன மேலும் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் பட்சத்தில், அவருக்கு குடியரசுத் தலைவர் வாய்ப்பு வழங்கி, காங்கிரஸ் கட்சியின் தரப்புக்கு செக் மேட் வைப்பதோடு, முஸ்லீம்களின் ஆதரவையும் பெற முடியுமென இரட்டை கணக்கு போடுகிற பாரதிய ஜனதா கட்சியின் தரப்பு. தற்போது முஸ்லீம்கள் தொடர்பாக பா.ஜ.கவில் சர்ச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்
கருத்துகள்