அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன், அவரது உடல் நலம் விசாரித்தார் பின்னர் அவரது சந்திப்பு முடிந்த நிலையில் செய்தியாளர் மத்தியில் பேசினர் “ எங்கள் மூத்த அண்ணன் இவர், எனவே மரியாதை நிமித்தமாக பார்ப்பதற்காக வந்தேன். அரசியல் ரீதியாகவும் கலந்து பேசினோம்” எனத் தெரிவித்தார். நீங்களும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட வேண்டுமெனத் தேவர் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சசிகலா நடராஜன், “ அதிமுகவிலுள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள் தான். எனவே அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த போது ஜாதி, மதம் பார்த்ததில்லை. அந்த அடிப்படைக் கொள்கை இப்போது வரை எனது மனதில் உள்ளது. அதிமுக அனைத்து ஜாதி, மதத்தை ஒன்றாக நினைக்கும் இயக்கமாகும். அந்த வழியில் எனது பயணம் தொடரும்” எனக் கூறியவர். மேலும் ஒரு இயக்கத்தில் சில நேரங்களில் இது போல சோதனை உருவாகும், பின்னர் அது சரியாகிவிடும். அதுபோல இப்போது ஏற்பட...
RNI:TNTAM/2013/50347