தமிழ்நாட்டில் காவல்துறையில் 12 உயர் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புக்கு மாறுதல் செய்து உத்தரவு.,
இதுவரை உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறையின் புதிய ஐஜியாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் போராட்டம் மற்றும் கலவரத்துக்கு உளவுத்துறையின் தோல்வியும் காரணமென விமர்சனமெழுந்த நிலையில், உளவுத்துறை ஐஜி மாற்றப்பட்டார்.
வள்ளியூர் சப்-டிவிஷன் ஏடிஎஸ்பி சமய் சிங் மீனா, மதுராந்தகம் சப்-டிவிஷன் ஏடிஎஸ்பி கிரண் ஸ்ருதி, பவானி சப்-டிவிஷன் ஏடிஎஸ்பி தீபக் சிவாச், கோட்டக்குப்பம் சப்-டிவிஷன் ஏடிஎஸ்பி ஹர்ஷ் சிங், திருத்தணி சப்-டிவிஷன் ஏடிஎஸ்பி சாய் பிரனீத் ஆகியோர் சென்னை பூக்கடை துணை ஆணையர் மகேஷ்வரன் மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாகவும், சென்னை வடக்கு போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான், பூக்கடை துணை ஆணையராகவும், ஆவடி டிஎஸ்பி-வி பட்டாலியன் எஸ்பி ராதாகிருஷ்ணன் சீருடைப் பணியாளர் தேர்வாணைய எஸ்.பி.யாகவும்,
சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் திருவல்லிக்கேணி துணை ஆணையராகவும், எஸ்.பி. கண்ணன் சென்னை நவீனமயமாக்கல் பிரிவு உதவி ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
கருத்துகள்