பணியில் பெண்கள் பங்களிப்பு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வின்படி,
கடந்த 2020-21 ஆம் ஆண்டில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் ஆண்கள் 73.5 சதவீதம் பேரும், பெண்கள் 31.3 சதவீதம் பேரும் தொழிலாளர்களாக உள்ளனர்.
12.07.2022-ன்படி, இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் 52.84 சதவீதம் பேர் பெண்களாவர்.
பெண்களின் வேலைவாய்ப்பு தரம் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூகப் பாதுகாப்பு 2020 பிரிவின்படி அவர்களுக்கான மகப்பேறு விடுமுறை 12 வாரத்திலிருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 மற்றும் அதற்குமேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இரவு நேர பணிகளில் கூடுதல் பாதுகாப்புடன் பெண்கள் பணிபுரியவும் அனுமதிக்கப்பட்டுள்ளது
இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். மேலும்தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நல மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் பெண் பணியாளர்களுக்கென பிரத்யேக மேம்பாட்டு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளனவா? அதற்கான ஆவணங்கள் உள்ளனவா? இல்லையெனில் ஏன் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை? மாநிலங்கள் வாரியாக பெண் பணியாளர்கள் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்படுகின்றன? குறிப்பாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி நிலை எவ்வளவு ? என்று நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் அளித்துள்ள பதிலை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வழங்கும் தகவல் இணைப்பு.
கருத்துகள்