வெளிநாட்டு கொள்முதலில் நிதி சேவைகளை வழங்குவதற்கு 3 தனியார் வங்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் அங்கீகரித்துள்ளது
அரசின் செயல்பாடுகளில் தனியாரை அனுமதிக்கும் முடிவின்படி, பாதுகாப்பு அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு கொள்முதல் நடவடிக்கைகளில், எல்ஓசி மற்றும் நேரடி வங்கி மாற்ற பணிகளை மேற்கொள்ள எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய மூன்று தனியார் வங்கிகளை நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ராணுவ கணக்குகளுக்கான முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரியும், சம்பந்தப்பட்ட மூன்று வங்கிகளின் அதிகாரிகளும் கையெழுத்திட்டுள்ளனர்
கருத்துகள்