பிரதமர் கலந்து கொள்ளும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவும்
மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28-ஆம் தேதி 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில் 188 நாடுகளின் செஸ் வீரர்கள், வீராங்கனைகள் 2,500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும்.
தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுவதில் பங்கேற்கும் படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். மேலும், ஜூலை 19-ஆம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர். ஜூலை மாதம் 28 ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில் 188 நாடுகளின் செஸ் வீரர்கள், வீராங்கனைகள் 2,500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும்.
தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுவதில் பங்கேற்கும் படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். மேலும், ஜூலை 19-ஆம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர். ஜூலை மாதம் 28 ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்