ரூ.94.34 லட்சம் மதிப்புள்ள வைரக்கற்கள் பறிமுதல்
சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்து சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த நஜிமுதீன் என்ற பயணியிடம் நடத்திய சோதனையில், வயிற்றில் மறைத்து எடுத்து வந்த 1746 வைரக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ 94.34 லட்சம் ஆகும். வைரங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தப் பயணியைக் கைது செய்தனர்.
மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு கே.ஆர். உதய் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்