தவிர்க்கக்கூடிய மஞ்சள்காமாலை நோய் குறித்து தங்கள் தொகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
பொதுமக்கள் மற்றும் அரசு துறையினரிடையே மஞ்சள்காமாலை நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தல்
பொதுமக்கள் மற்றும் அரசு துறையினரிடையே மஞ்சள்காமாலை நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து குடியரசுத் துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். அரசு துறையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தவிர்க்கக்கூடிய மஞ்சள்காமாலை நோய் குறித்து தங்கள் தொகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
உலக மஞ்சள்காமாலை நோய் தினத்தையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் முக்கிய உரையாற்றி அவர், தூய்மை பாரத இயக்கம் மற்றும் காசநோய் இல்லா இந்தியா இயக்கம் என்ற வழியில், 2030ம் ஆண்டுக்குள், மஞ்சள்காமாலை நோயை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கில், அதனை மக்கள் இயக்கமாக நடத்தவேண்டும் என்று அறிக்கை விடுத்தார்.
மஞ்சள்காமாலை நோய் குறித்த விழிப்புணர்வு இயக்கத்தை உள்ளூர் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், அவர்களது மொழியிலேயே நடத்த வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகளை திரு வெங்கைய்யா நாயுடு அறிவுறுத்தினார்.
உலகில் அனைத்து துறைகளிலும், இந்தியா வலிமை மிக்க நாடாக மாறிவரும் நிலையில், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான நாடாக இந்தியாவை மாற்றுவது முக்கியம் என்று திரு வெங்கைய்யா நாயுடு தெரிவித்தார்.
கருத்துகள்