முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஇஅதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை கோட்டாட்சியர் சீல் வைத்தனர்.

அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை அக் கட்சியின் தொண்டர்கள் நடத்திய வன்முறை காரணமாக, கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை கோட்டாட்சியர் சீல் வைத்தனர்.


பலத்த காவல்துறை பாதுகாப்புடன் உடைக்கப்பட்ட கதவுகளைச் சரிசெய்து அஇஅதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அஇஅதிமுக அலுவலகத்தில் 145 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன்படி, அந்த இடத்தில் யாரும் சட்ட விரோதமாகக் கூடக் கூடாது. மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உட்கட்சியின் மோதலால் சென்னை இராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் இன்று மீண்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது.அஇஅதிமுக தலைமை அலுவலகத்தின் இரட்டை வாசலை, வருவாய்த்துறை கோட்டாச்சியர் பூட்டி முத்திரை வைக்கிறார். ஒரு தொண்டரின் குரல் வருகிறது. 



"இத்தனைக்கும் காரணம் நமது கட்சியை இயக்கும் வேறு ஒரு கட்சி பெயர் வந்தது இச் சூழலில் ". “நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா என்பதை மாற்றியதற்கு அஇஅதிமுக தொண்டர்கள் பதிலடி கொடுப்பார்கள்” என்று சசிகலா நடராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அஇஅதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் என்னையே ஆதரிக்கின்றனர். இன்று ஒரு கருத்து, நாளை ஒரு கருத்தை நான் பேச மாட்டேன். எல்லாரையும் ஒன்று சேர்த்து ஒரே அஇஅதிமுகவாக இணைந்து வெற்றி பெறுவோம். ஆட்சி அமைப்போம். அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு மற்றும் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் செய்தியாளர்களுக்கு சசிகலா நடராஜன் கொடுத்த பேட்டியில், "அஇஅதிமுக தொண்டர்கள் நினைப்பவர்கள் தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக முடியும். இதுதான் சட்டம். இதன்படிதான் அஇஅதிமுக இயங்கும்.தொண்டர்கள் இருக்குமிடத்தில் தான் தலைவர்கள் உருவாக வேண்டும். பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, இந்த நியமனம் தவறானது.ஓ.பன்னீர்செல்வம் கட்சித் தலைமை அலுவலகம் வருகிறார் எனக் கேள்விப்பட்ட எடப்பாடி கே.பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் அங்கு குவிந்ததனால் பதற்றமான சூழல் நிலவ கற்கள் கட்டைகளால் மாறி மாறி இருதரப்பு ஆதரவாளர்களும் கடுமையாகத் தாக்கி கொண்டதில் பலருக்கு மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது. மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதால் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருக்கு மணிக்கட்டில் பலத்த காயமேற்பட்டது. இந்த நிலையில் கலவரங்களுக்கு மத்தியிலும் ஜெ.ஜெயலலிதா எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஜெ.ஜெயலலிதா நின்ற பால்கனியில் உற்சாகமாக தொண்டர்களை பார்த்துக் கையசைத்தார். அதே நேரத்தில் ஆத்திரமடங்காத ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் சுற்றி வைக்கப்பட்டிருந்த எடப்பாடி கே.பழனிச்சாமியின் புகைப்படங்களை கிழித்து அதிமுக அலுவலகத்திற்கு உள்ளே வைத்து தீவைத்துக் கொளுத்தினர்.    

ராயப்பேட்டையில் கட்சி அலுவலகத்தை கைப்பற்றிய நிலையில் ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் 

பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரத்திற்கு தனது பிரச்சார வாகனத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி புறப்பட்டுச் செனறதையடுத்து வழிநெடுகிலும் அவர்களுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்த நேரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என எதிர்பார்த்த நிலையில் அதை உறுதிப்படுத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் புறப்பட்டார். இங்கு தான் பிரச்சனையே ஆரம்பித்தது.

இருந்தும் மனம் தளராத ஓ.பன்னீர்செல்வம் ரத்தக்கறை படிந்த காருடன் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தார் . முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் வருவதை ஒட்டி அதிமுகவின் வெளிப்புற கேட்டை பூட்டப்பட்டு இருந்த நிலையில் அவற்றை உடைத்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவையும் அடித்து உடைத்தனர். இதையடுத்து புகழேந்தி உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் சென்றார் ஓ.பன்னீர்செல்வம்.













நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா என்பதை மாற்றியதற்கு தொண்டர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். அஇஅதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்ததை தொண்டர்களும் விரும்பவில்லை. பொதுமக்களும் ரசிக்க மாட்டார்கள். தொண்டர்கள் முடிவு தான் இறுதியானது. அதுதான் வெற்றி பெறும்" என்று கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த அஇஅதிமுக, சசிகலா நடராஜன் தலைமைக்கு எதிராக அஇஅதிமுகவில் தர்மயுத்தம் நடத்தினார். இதையடுத்து அப்போது அஇஅதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா நடராஜன், ஓ.பன்னீர் செல்வம் வசமிருந்த  அஇஅதிமுகவின் பொருளாளர் பதவியை முதலில் பறித்து. திண்டுக்கல் சீனிவாசனை மீண்டும் பொருளாளராகவும்  நியமித்தார்.2016-ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா மறைந்த உடனேயே தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால் சில மாதங்களிலேயே அப்பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை சசிகலா நடராஜன் ஏற்க திட்டமிட்டிருந்தார். அதன்பின்னர் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதியில் அஇஅதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே ஓ.பன்னீர்செல்வம் அதிரடி நீக்கம் செய்யப்பட்டார்.







ஆட்சி மாற்றம் ஆன நிலையில் காட்சிகள் மாறின; அஇஅதிமுகவில் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமை உருவானது; அந்த தலைமையுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததனால் அஇஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.  





தற்போது அஇஅதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டதனையடுத்து சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுகவின் சிறப்புப்  பொதுக்குழுக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். அந்த பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானம் செல்லுமா என்பதை இனி வருங்காலத்தில் நீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும் என்ற நிலையில் அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்ற இரண்டு நபர்களை நீக்கம் செய்வதாக அறிவித்ததும் எடப்பாடி கே பழனிச்சாமி தரப்பில் கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவருடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதும் இறுதி முடிவு சிவில் நீதிமன்றம் தான் முடிவு செய்யும் கடந்த 5 ஆண்டுகளில் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் இரண்டாவது முறையாக நீக்கப்பட்டுள்ளார்.அஇஅதிமுக வில் நடக்கும்  சண்டையில் எடப்பாடி கே.பழனிச்சாமியின் வெற்றி முழுமையானதாக கொஞ்சநாள் நீடிக்கலாம். ஆனால் இறுதி வெற்றி அவருடையதா இல்லையா என்பதே. 

சிக்கலின் மையப்புள்ளி சின்னம்மா  என்றழைக்கப்படும் சசிகலா நடராஜனின் கொள்ளைகளில் இருந்த சாமர்த்தியம் கூட்டாளிகளைத் தேர்வு செய்வதில் இல்லை. 

அந்தவகையில்  டி.டி.வி.தினகரன் சாமர்த்தியமான நபர். அவரது  தேர்வான பெரியகுளம் ஓ பன்னீர் செல்வம் இன்று வரை தன்னை ஒரு தனித்த ஆளுமையாக வளர்த்துக் கொள்ள முடியாத , ஆதரவற்ற நபராகவே இருக்கிறார். நாளையே இவர் மாறலாம் 


ஆனால் அதேவேளையில் , சொந்த உறவுகளையும் நம்ப முடியாமல், சொந்தப் பணத்தையும் கையாள முடியாமல் , பல கோடிகளுக்கு எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கொடுத்து விட்ட பிறகு சிறை சென்றவர் . அந்தத் தேர்வுக்கு இன்னொரு காரணம் 2001- 2006 , 2011-17 சசிகலா நடராஜன் வரவு கொங்கு பகுதியில் உள்ள பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி கஜானாவில்  நிமிர்ந்து விட்டார் எடப்பாடி கே.பழனிச்சாமி. இப்போதெல்லாம் அவர் யாரிடமும் பனிவதில்லை 




இப்போது கூட எடப்பாடி பிரச்னை ஓ.பன்னீர்செல்வம் போல ‘ அல்ல. அடுத்த குறி சசிகலா நடராஜனை அரசியலை விட்டு முற்றிலுமாக தடயமின்றி அகற்றுவது தான். அப்போதுதானே ‘ அப்பாடா’ என மூச்சுவிட முடியும். அதற்கு உடனிருக்கும் நபர்கள் தான் கே.பி.முனுசாமி எனவே எடப்பாடியின் இறுதி வெற்றி சின்னம்மாவான சசிகலா நடராஜனை அரசியல் ரீதியாக கானாமலாக்குவதே. 

ஆனால் அதுவரை பொதுக்குழு, செயற்குழு, மாவட்டக் கழகங்கள் , தலைமைக்குழுவிற்கு பணம்  போட்டு வளர்க்க வேண்டும். அதை அவர் வேலுமணி, தங்கமணி துணையுடன் செய்து முடிப்பார் அதை மக்கள் மற்றும் அக் கட்சி தொண்டர்கள் வேடிக்கை பார்ப்பார்கள்.தற்போது அஇஅ.தி.மு.க., பெருந்தலைகளைச் சுற்றிச் சுழலும் கொலை வழக்குகள்



கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, டாக்டர் கொலை வழக்கு, இலஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரித் துறை சோதனை என, பல முனை தாக்குதல்களால், கொங்கு மண்டல அஇஅ.தி.மு.க., பிரமுகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளதென்பது உண்மை தான்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமடைந்துள்ளது; கோயமுத்தூரில் தான் இந்த விசாரணை நடக்கிறது.



அ.இ.அ.தி.மு.க., வர்த்தக அணியின் தலைவர் சஜீவன், மற்றும் சகோதரர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகன், தம்பி மகன் ஆகியோரிடம், தனிப்படைக் காவல்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளதன் தொடர்ச்சியாக, அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், ஆற்று மணல் கடத்தல் அதை அள்ளும் ஒப்பந்ததாரராக இருந்து, அக்கட்சிக்கு முக்கிய நிதி ஆதாரமாக விளங்கிய ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரிடமும் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களைத் தவிர்த்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான சேலம் இளங்கோவனையும் விசாரணை வளையத்தில்  கொண்டு வர, காவல்துறை முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.குற்றவாளிகள் கொடுத்துள்ள தகவல்களில், அ.இ.அ.தி.மு.க., முக்கிய புள்ளிகள் சிலருக்கு அப் சம்பவங்களில் நேரடித் தொடர்பிருப்பதை உறுதிப்படுத்தி இருப்பதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை தீவிரமாகும் என்கின்றனர், விபரமறிந்தவர்கள் 

கட்சி தலைமையைக் கைப்பற்றும் நோக்கில் நடக்கும் மோதலில், கோடநாடு சம்பவத்தின் பின்னணி குறித்து, ஒரு தரப்பிலிருந்து பல உண்மைகள் காவல்துறைக்கு கசிந்துள்ளதாகத் தெரிகிறது. அதனால், கோயமுத்தூர் சார்ந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க., புள்ளிகள் சிலருக்கு சிக்கல் நெருங்கி விட்டதாகவும், அதில் சிலர் கைதாகலாம் எனவும் பேச்சு உலவ



அதற்கிடையில், கோயமுத்தூரில் தனியார் மருத்துவமனை நொறுக்கப்பட்ட வழக்கும், அதில் தொடர்புடைய டாக்டர் உமாசங்கர் விபத்தில் மரணமடைந்த வழக்கும், மீண்டும் விசாரிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

டாக்டர் மரணத்தில் மர்மமிருப்பதாக, அவரின் உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளதுடன், அதில் கோயமுத்தூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க., புள்ளிகளுக்கு நேரடித் தொடர்பிருப்பதாகவும் சந்தேகம் கிளப்பியு நிலையில் இந்த வழக்கில், அ.இஅ.தி.மு.க., புள்ளி ஒருவரின் தொடர்பு குறித்து, வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், கைது நடவடிக்கை பாயுமென்ற தகவலும் தெரிகிறது.

அதற்கிடையில், முன்னால்' அமைச்சர் வேலுமணிக்கு  நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர் மற்றும் வேலுமணி மீதான 'டெண்டர்' முறைகேடு வழக்கில் சிக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோர் வீடுகளில், வருமான வரித் துறையின் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி, ஆவணங்களை எடுத்துச் சென்றதும் அடங்கும் 

இவர்கள் மீதான ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு விசாரணையும் தீவிரமடைந்திருக்கிறது.இக் காரணமாக, சம்பந்தப்பட்ட அ.இஅ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சிக்கும், அச்சத்துக்கும் உள்ளாகியுள்ளனர். கொலை, கொள்ளை, ஊழல் வழக்குகள், லஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரித் துறை 'ரெய்டு'கள் என, கொங்கு மண்டல அ.தி.மு.க., புள்ளிகள் மீதான நெருக்கடி, நாளுக்கு நாள் அதிகமாகிறது. அதை கடந்த நிலையில் தங்களை அரசியல் ரீதியாக வல்லவர்களாக மாற்றும் முயற்சியில் முன்னணியாக இருக்கக் காரணம் என மக்களால் கருதப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...