உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு நாளையும் விசாரணை தொடர்கிறது
அ.இ.அ.தி.மு.க வில் திருத்தப்பட்ட சட்ட பிரிவு law Section ,
உட்பிரிவு (subsection), விதி( rule), உள்விதி (sub rule), உறுப்பு (Article) படி 20 பி, மற்றும் 43 சட்டவிதிகளின் படி ஏற்கனவேயிருக்கும் விதிகளைத் திருத்த முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை இரத்து செய்ய எந்த அதிகாரமும் கிடையாது.
'தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளை மாற்ற அதிகாரமில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது டிசம்பர் 1, 2021 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. இது தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் இதை நிறைவேற்ற எந்த அதிகாரமும் கிடையாது இந்த வழக்கு தான் நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தினேஷ் மஹேஸ்வரி, கிருஷ்ண முராரி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரானார். கேவியட் மனு தாக்கல் செய்த ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மணிந்தர் சிங் ஆஜரானார். எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பினர்: 23 தீர்மானங்களுக்கு மட்டுமே உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது தவறு. கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதோடு 23 தீர்மானங்கள் பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் உள்ள அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
நீதிபதிகள்: உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை .
ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர்: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் உள்ளது. செப்டம்பர் வரை பதவிக்கு கால அவகாசம் உள்ளது. அதை மாற்ற முயற்சி செய்கிறார்கள்.நீதிபதிகள்: கட்சிக்குள் என்ன செய்கிறார்கள். என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதில் நாங்கள் கருத்துத் தெரிவிக்க முடியாது. உட்கட்சி விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்: 23 தீர்மானங்களை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை பொதுக்குழு பின்பற்றவில்லை.
நீதிபதிகள்: 23 தீர்மானங்களை மட்டுமே பொதுக்குழு நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது. பொதுக்குழு விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது,
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்: ஆனால் இந்த விவகாரம் சட்ட ரீதியாகத் தவறு. அதனால் நீதிமன்றத் தலையீடு அவசியம். நீதிபதிகள்: இது உட்கட்சி விவகாரம். நீங்கள் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் இதில் எந்த உத்தரவையும் பிரிக்க முடியாது. எங்களின் நீதி கைகளை எல்லா இடங்களிலும் நீட்ட நாங்கள் தயாராக இல்லை.
ஓபன்னீர்செல்வம் தரப்பினர்: 5 வருடத்திற்கு இருக்கும் பதவியை இடையில் நீக்கப் பார்க்கிறார்கள் நீதிபதிகள்: கேவியட் மனு தாக்கல் செய்தவரும், மனுதாரர்களும் பொதுக்குழு உறுப்பினர்கள் தான். இதை ஏன் நீங்கள் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக்கொள்ளக் கூடாது. ஏன் இங்கே கொண்டுவருகிறீர்கள் ?
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்: இரட்டைத் தலைமையை நீக்கி ஒற்றை தலைமை கொண்டு வரப் பார்க்கிறார்கள். அது சட்டப்படி தவறு என்பதால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். உச்ச நீதி மன்றத்தின் இடைக்கால உத்தரவு பத்திகள் கூறும் தகவல்
ஓ.பன்னீர்செல்வம். சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி முன்பு 11.7.22 ஆம் தேதியில் நடைபெறயிருக்கும் பொதுக் குழு கட்சி விதிகளுக்குப் புறம்பானது, தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்காடத் தடையில்லை. மேலும் உச்ச நீதிமன்றத்தில் 23.6.22 தேதியிட்ட தீர்ப்பின் மீதான மேல் முறையீடு நிலுவையிலிருப்பது தனி நீதிபதி புதிய வழக்கினை விசாரிப்பதற்கு இடையூறானதில்லை. 23.6.22 தீர்ப்பின் அடிப்படையிலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு மட்டுமே இடைக்காலத் தடை. கட்சியில் உறுப்பினரே இல்லாத நீங்கள் எதன் அடிப்படையில் வழக்கு தொடுத்தீர்கள் என்று கேட்பார்கள்..
எதனடிப்படையில் மனு அனுமதிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு சட்ட விவரம் இல்லை. அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை முடக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, J.J. கட்சி என்ற வேறு கட்சி நிறுவனர் பி.ஏ.ஜோசப் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு சென்னை உயர்நீதி மன்ற முதல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து கட்சிக்கு சம்பந்தப்பட்ட நபரில்லை என்ற நிலையில் மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. அஇஅதிமுக வின் பொதுக்குழுக் கூட்டம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடத்துவது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தனி நீதிபதி முன் தற்போது ஓ.பன்னீர்செல்வம் முறையிட்டுள்ளார். அதில், அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் 15 நாட்களுக்கு முன்பே வழங்கப்பட வேண்டும். ஜூலை மாதம் 11- ஆம் தேதி பொதுக்குழு நடப்பதாக நேற்று மாலை தான் எனக்கு அழைப்பிதழ் வந்தது. எனவே, இந்த மனுவை அவசர வழக்காகப் பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்ததையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை அவசர வழக்காக (06 ஜூலை 2022) அன்று விசாரிக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் அளித்துள்ளார். பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தான் கூட்ட வேண்டும். ஆனால் தலைமைக்கழகம் எப்படி பொதுக்குழுவைக் கூட்ட முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் 5 வருடம் இருக்கிறது. அதனால் சட்டப்படி இவர்கள் தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்த நிலையில். இரண்டு தரப்பின் வாதங்களையும் நீதிபதி குறிப்பெடுத்துக்கொண்டதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி, ஜூன் மாதம் 23 ஆம் தேதி பொதுக்குழுவின் போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. அந்தப் பதவிகள் அப்போதிருந்ததே. அப்படி இருக்கும் போது ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்கும் என்ற அறிவிப்பை தமிழ்மகன் உசேன் எப்படி அறிவிக்க முடியும்? அவைத்தலைவர் எப்படி இந்த அறிவிப்பை வெளியிட முடியும் என்று கேள்வி எழுப்பினார். 2 மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடத்த நிலையில் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார். நாளையும் வழக்கு மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் தற்போது வேறு வகையில் நெருக்கடி தொடர்கிறது. அதன் விபரம் வருமாறு:- கோயமுத்தூர் வடவள்ளியைச் சேர்ந்த சந்திரசேகர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர், கோயமுத்தூர் அஇஅதிமுக வின் புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து வருகிறார். அஇஅதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா' நாளிதழின் வெளியீட்டாளராகவும் இருக்கிறார் சந்திரசேகர். சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோயமுத்தூர் மாநகராட்சி 38 ஆம் வார்டு கவுன்சிலராக இருக்கிறார். எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை யின் அமைச்சராக இருந்த போது, ஒப்பந்தம் உள்ளிட்ட விஷயங்களில் தலையிட்டதாக சந்திரசேகர் மீது திமுக மற்றும் அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது தொடர்பாக பல வழக்குகளும் உள்ளன.
அதன் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி, அவர் சகோதரர் அன்பரசன், சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்ததையடுத்து இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வேலுமணி மற்றும் சந்திரசேகர் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனைகளும் நடத்திய நிலையில் நேற்று காலை முதல் சந்திரசேகருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வடவள்ளியிலுள்ள சந்திரசேகர் வீடு, அவரின் தந்தை வீடு உள்பட 6 இடங்களில் அதிகாரிகள் 6 குழுவினர்களாகப் பிரிந்து சோதனை நடத்தினர். வடவள்ளியிலுள்ள அவர் வீட்டில் மட்டும் சுமார் 8 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் ஆட்டுத் தோல் வியாபாரி செய்யாதுரை. இவர் மற்றும் இவரது மகன் நாகராஜன் ஆகியோர் நடத்தும் நிறுவனம் எஸ்பிகே அண்ட் கோ. முந்தைய அஇஅதிமுக ஆட்சியில் எஸ்பிகே நிறுவனம் தமிழக அரசின் சாலை மற்றும் கட்டுமான ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தது. எடப்பாடி கே. பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த போது தொடங்கி, பல்வேறு டெண்டர்கள் இந்த நிறுவனத்துக்கே ஒதுக்கப்பட்டன. செய்யாதுரை எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் எனக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், செய்யாதுரை மற்றும் அவரது மகன்களுக்குச் சொந்தமான வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். செய்யாதுரையின் எஸ்.பி.கே கட்டுமான நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தினர். எடப்பாடி கே.பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்படும் செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னணியில் ஓ.பன்னீர்செல்வம் கேட்ட உதவியும், பாரதிய ஜனதா கட்சித் தலைமையின் தலையீடும் இருக்கலாம் என சந்தேகங்கள் தற்போது மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.
கருத்துகள்