மத்திய அரசின் தகவல் தொடர்பு கள அலுவலகம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், பன்னிகுளம் கிராமத்தில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தகவல் தொடர்பு கள அலுவலகம் சார்பில் மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொ
ண்டு சேர்க்கும் சிறப்பு விழிப்புணர்வு முகாம் இன்று(28.07.22) நடைபெற்றது.
இந்த முகாமை இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநர் எஸ். புவனேஸ்வரி தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசும்போது "தருமபுரி மாவட்டத்தில் இந்தியன் வங்கி முன்னோடி வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி சார்பில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர் முதல் அனைவருக்கும் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிகள் முடித்தவர்களுக்கு சுய தொழில் தொடங்க மத்திய அரசு பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருகிறது. இதை அனைவரும் அறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றார்."
இந்த விழிப்புணர்வு முகாமில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலைவாணி, தருமபுரி காசநோய் மையம் மருத்துவ அலுவலர் சுதா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆர்.ஜெயந்தி,கம்பைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் சந்தோஷ் குமார், இந்தியன் வங்கி நிதி சார் கல்வி ஆலோசகர் ஜி.எழில் மணி, ஊராட்சி மன்ற தலைவர் வெற்றிச்செல்வன் துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டு பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம், கோவிட் நோய் தடுப்பு, பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், டிஜிட்டல் இந்தியா, எட்டு ஆண்டு கால சாதனை, திறன் இந்தியா இயக்கம், 75 ஆவது ஆண்டு சுதந்திர விழா கொண்டாட்டங்கள், ஒரே பாரதம் உன்னத பாரதம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசினர்.
இந்த சிறப்பு விழிப்புணர்வு முகாமில் புகைப்பட கண்காட்சி இடம்பெற்றது. பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் மற்றும் கோலப் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக கள விளம்பர அலுவலர் பிபின் எஸ்.நாத் வரவேற்புரை ஆற்றினார். முடிவில் கள விளம்பர உதவியாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.
கருத்துகள்