பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் உண்மையில் சாமானிய மக்களுக்கு வாழ்க்கையை எளிதாக்குதல், முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல் என்ற நோக்கத்துடன் கடந்த 8 ஆண்டு காலத்தில் சமூக சீர்திருத்தங்களாக இருக்கின்றன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் உண்மையில் சாமானிய மக்களுக்கு வாழ்க்கையை எளிதாக்குதல், முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல் என்ற நோக்கத்துடன் கடந்த 8 ஆண்டு காலத்தில் சமூக சீர்திருத்தங்களாக இருக்கின்றன என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை, இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
கர்நாடக அரசும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையும் பெங்களூருவில் ஏற்பாடு செய்திருந்த நிர்வாகம் குறித்த இரண்டு நாள் மண்டல மாநாட்டில் டாக்டர் ஜிதேந்திர சிங் நிறைவுரை ஆற்றினார். “நல்ல நிர்வாகத்திற்கு குடிமக்களை, தொழில்முனைவோரை, அரசை நெருக்கமாக கொண்டு வருதல்” என்பதை இந்த மாநாடு மையப் பொருளாகக் கொண்டிருப்பது பற்றி குறிப்பிட்ட அவர், பரவலான சமூக தாக்கங்களை கொண்டுள்ள சீர்திருத்தங்களை பட்டியலிட்டார்.ஊழியர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் உள்ள தேசிய ஆள்சேர்ப்பு முகமை, அரசிதழ் பதிவுபெறாத பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கு கணினி அடிப்படையில் பொது தகுதித் தேர்வை இந்த ஆண்டு இறுதிவாக்கில் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மாநாட்டுப் பிரதிநிதிகளிடம் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். தொடக்கத்தில் 12 மொழிகளில் நடத்தப்படும் இந்தத் தேர்வு படிப்படியாக அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் நடத்தப்படும் என்றார்.
கர்நாடக மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலன், மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையின் செயலாளர் திரு வி ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் உரையாற்றினர்.
கருத்துகள்