இந்தியாவில் நீதித்துறையின் அணுகல் மற்றும் பயன் பகிர்வு: நீதிபதி திரு கே. ராமகிருஷ்ணன் வெளியிடுகிறார்
இந்தியாவில் நீதித்துறையின் அணுகல் மற்றும் பயன் பகிர்வு: நீதிபதி திரு கே. ராமகிருஷ்ணன் வெளியிடுகிறார்
‘இந்தியாவில் நீதித்துறையின் அணுகல் மற்றும் பயன் பகிர்வு: வளர்ந்து வரும் போக்குகள், சவால்கள் மற்றும் முன்னேறுவதற்கான வழிகள்’ என்ற தலைப்பிலான புத்தகம் ஒன்றை சென்னை பிரிவின் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி திரு கே. ராமகிருஷ்ணன் சென்னையில் இன்று வெளியிடவிருக்கிறார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவு பேராசிரியர் டாக்டர் எஸ். ஏழுமலையும், தேசிய பல்லுயிர் ஆணையத்தின் செயலாளர் திரு ஜஸ்டின் மோகனும் இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை, இந்திய அரசின் தேசிய பல்லுயிர் ஆணையம் (சென்னை) வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி திரு வி. ராமசுப்பிரமணியன் இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ளார்.
இந்தியாவில் காடுகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்கள் மற்றும் விவசாயிகளுக்குப் பலன்களைப் பகிர்ந்தளிக்கும் வகையில் உள்ள பல்வேறு சட்டங்களின் வளர்ச்சி நிலையையும், வணிக மதிப்புள்ள நமது உயிரி வளங்களைப் பாதுகாப்பதற்கு நிறுவனங்களின் பயன் பகிர்வின் முக்கியத்துவம் பற்றியும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. பயன் பகிர்வு குறித்து பல்வேறு இந்திய நீதிமன்றங்கள் வழங்கியுள்ள குறிப்பிடத்தக்க தீர்ப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன. நீதிபதிகள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு பாடப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்நூல் மிகுந்த பயனளிக்கும்.தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையத்தின் நூல் வெளியீடு
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல நீதிபதி திரு கே.ராமகிருஷ்ணன், சென்னை பல்லுயிர் பெருக்க ஆணையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், “இந்தியாவில் அணுகல் மற்றும் நன்மை பகிர்வு நீதித்துறையின் பரிணாமம் - வளர்ந்து வரும் போக்குகள், சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி” என்ற புத்தகத்தை வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் வனத்துறை துணை ஆய்வாளர் திரு. எஸ்.சசிகுமார் பெற்றுக்கொண்டார். புத்தகத்திற்கான அணிந்துரையை உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. வி.ராமசுப்ரமணியன் வழங்கியுள்ளார்.
இந்நூலை சென்னை தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின், எக்ஸலண்ட் பள்ளியின் பேராசிரியர் டாக்டர். எஸ்.ஏழுமலை, தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் செயலர் திரு. ஜே.ஜஸ்டின் மோகன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் இலவச பதிப்பாகும்.
இந்தியாவில் பல்வேறு சட்டங்களின் கீழ் காடுகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்கள் மற்றும் விவசாயிகளுக்கு பலன்களைப் பகிர்ந்தளிக்கும் பரிணாம வளர்ச்சியையும், வணிக மதிப்பைக் கொண்ட நமது உயிரியல் வளங்களைப் பாதுகாக்க நிறுவனங்களின் நன்மைப் பகிர்வின் முக்கியத்துவத்தையும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்த புத்தகம் உலகின் பல்வேறு பகுதிகளில் சில வெற்றிகரமான பலன் பகிர்வு தொடர்பான பிரச்சனைகளில் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் வழங்கிய சில முக்கிய தீர்ப்புகளை உள்ளடக்கியது. தேசிய பல்லுயிர் ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றிய கண்ணோட்டத்தையும் புத்தகம் வழங்குகிறது உயிரி பல்லுயிர் பெருக்க சட்டம், 2002 இன் கீழ் இந்தியாவில் பயன் பகிர்வு பொறிமுறையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் இது வழங்குகிறது.
நீதிபதி திரு. கே.ராமகிருஷ்ணன் தமது உரையில், உயிரியல் வளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் வழங்குபவர்களுக்கும் இடையே நன்மைப் பகிர்வின் முக்கியத்துவத்தை பிரபலப்படுத்தும் இந்த புத்தகத்தை வெளியிட தேசிய பல்லுயிர் ஆணையம் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார். பல நூற்றாண்டுகளாக இந்த அறிவைப் பாதுகாத்த சமூகங்கள் பயனடைகின்றன. கிராமப்புற இந்தியாவுக்குப் பயனளிக்கும் உயிரியல் பன்முகத்தன்மை சட்டத்தின் ஆய்வு மற்றும் விளக்கத்தை சட்டக் கல்லூரி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
கருத்துகள்