அக்னிபத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஜூலை 11 அன்று நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் விளக்கமளிக்கிறார்
புதுதில்லியில், பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் ஜூலை 11 2022 அன்று நடைபெறவுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், அண்மையில் தொடங்கப்பட்ட அக்னிபத் திட்டத்தில் வீரர்கள் சேர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கவுள்ளார்.
இதில் பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கருத்துகள்