கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கனியாமூர் சக்தி இன்டா்நேஷனல் பள்ளியில்.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தின் 17 வயதுச் சிறுமி 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவி, பள்ளி விடுதியில் தங்கயிருந்தவாறு, படிப்பை தொடர்ந்து வந்த நிலையில், ஜூலை மாதம் 13 ஆம் தேதியன்று, மாணவி விடுதி அறையில் மர்மமாக உயிரிழந்தத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக சிறுமியின் வீட்டாருக்கு பள்ளி தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது அவரது குடும்பத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகமே சிறுமியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மாணவியின் இறப்புக்கு நியாயம் கோரி, மாணயின் இறப்பில் சந்தேகமிருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மற்றும் ஜாதி அமைப்புகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று காலை முதல் அது கலவரமாக மாறியது.
சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஒன்று சேர்ந்த இளைஞா்கள் அந்த சக்தி இண்டர்நேஷனல் பள்ளியை சூறையாடினர் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளி வாகனத்திற்கும் தீ வைத்தனர். மேலும் காவலா் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். போராட்டகாரர்கள் கல்வீசித் தாக்கியதில் காவல்துறை துணை தலைவர் பாண்டியன் உள்பட 20 க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். மாணவி மரணம் தொடர்பாக, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏராளமானோர் போராட்டம் செய்து வருவதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவ மாணவி இறப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், அதுகுறித்து புலன் விசாரணை செய்யப்படும்.
மாணவி தனது இறப்புக்கு முன் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில் கணிதம், வேதியியல் பாடங்கள் கடினமாக இருந்ததென தெரிவித்துள்ளார், வேறு குறிப்பிட்டு எந்த குற்றச்சாட்டு அதில் தெரிவிக்கவில்லை. ஆசிரியர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை ஒடுக்க 500 ஆயுதப்படையினர் சென்றுள்ளனர். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகமிருப்பதாகக் கூறி, கடந்த 4 நாட்களாக அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று இரவு முதல் விடிய விடிய மாணவியின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று காலை போராட்டக்காரர்கள் பள்ளி மீது கல்வீச்சில் ஏற்பட்டனர். பள்ளி வாகனங்களை தீ வைத்து எரித்தனர். மூன்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமாயின. அதையடுத்து காவல்துறை தடியடி நடத்தியதைத் தொடர்ந்து அப்பகுதியே கலவர பூமியானது விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர் பண்டியன் உள்ளிட்ட காவலர்கள் மற்றும் மாணவர்களுக்கும் காயமேற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் காவல்துறை வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை, பள்ளிக்கூடம் மற்றும் அப்பகுதியில் நின்றிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி இண்டர்நேஷனல் பள்ளி விடுதி மாணவி மர்ம மரணம் தொடர்பில் நடந்த போராட்டம் வன்முறைகள் உளவுத்துறையின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறாகவே தெரிவதாக பலர் கூறினாலும், உண்மை பாதிக்கப்பட்ட நபர்களின் குரலுக்கு அரசு சிறிதளவேனும் செவிசாய்க்கவில்லை என்பதையும் பேச்சு வார்த்தை நடத்தி முடிக்க சரியான வழிகாட்டுதல் இல்லாத நிலை தான் காரணம் எனவும் பேசப்படுகிறது.
பிரச்சனை நடந்து வரும் நான்கு நாட்களாக அந்த சுற்று வட்டார ஊர் பகுதியிலும் செல்போன் வாட்சப்பிலும், கிராமங்களிலும் தனியார் சக்தி இண்டர்நேஷனல் பள்ளி மாணவி மரணம் பற்றி ஏகப்பட்ட செய்திகள், மக்களும் வழக்கத்திற்கு மாறாக திரண்டு மூன்று நாட்கள் போராடியும் இருக்கிறார்கள். இந்நிலையில்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு சக்தி இண்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளியை எரித்து நாசமாக்கியதன் பின்னர் தான் மாணவி மர்மமாக மரணம் அடைந்த நிகழ்வு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேசப்படுகிறது உளவுத்துறையோ உரிய உண்மைத் தகவல்களை அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை என்பது புலனாகிறது.
. டிராக்டர், பெட்ரோல் கேன், உட்பட முன் தயாரிப்புகளுடன் நடக்கும் இந்தக் கலவரம் போராட்டமல்ல. எந்த மக்கள் போராட்டங்களையும் அலட்சியம் செய்தால் அதுவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
மர்மமாக விடுதியில் இறந்து போன அந்த மாணவியின் விவகாரத்தில் பள்ளிக்குத் தொடர்பு உண்டு என்றால் கடும் நடவடிக்கை தேவை. கலவரங்களில் மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை பள்ளியும் அதன் வாகனங்கள் தான் சேதமானது என்பதை இங்கு பார்க்கலாம். தவறான நடவடிக்கைகள் மற்றும் ஊழல்கள் தீர்வில்லை எனும் போது தான் மக்கள் தங்கள் கோபத்தை வேறு விதமாகப் பிரதிபலிப்பு செய்த நிகழ்வாகவே அங்கு பார்க்கப்படுகிறது இதுவே இங்கு பொது நீதி.
மர்மமாக விடுதியில் இறந்து போன அந்த மாணவியின் விவகாரத்தில் பள்ளிக்குத் தொடர்பு உண்டு என்றால் கடும் நடவடிக்கை தேவை. கலவரங்களில் மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை பள்ளியும் அதன் வாகனங்கள் தான் சேதமானது என்பதை இங்கு பார்க்கலாம். தவறான நடவடிக்கைகள் மற்றும் ஊழல்கள் தீர்வில்லை எனும் போது தான் மக்கள் தங்கள் கோபத்தை வேறு விதமாகப் பிரதிபலிப்பு செய்த நிகழ்வாகவே அங்கு பார்க்கப்படுகிறது இதுவே இங்கு பொது நீதி.
கருத்துகள்