தமிழ்நாட்டில் பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்ட அமலாக்கம் குறித்த தணிக்கை அறிக்கை இன்று ஆளுநரிடம் வழங்கப்பட்டது
தமிழ்நாட்டில் 2021 மார்ச் 31 உடன் முடிவடைந்த ஆண்டில் பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்ட அமலாக்கம் குறித்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக இன்று (2022, ஜூலை 04) மேதகு ஆளுநர் திரு ஆர் என் ரவியிடம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கையில் சேர்ப்பதற்காக 2021-2022 காலத்தில் பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்ட அமலாக்கத்தின் செயல்பாடு குறித்த தணிக்கையை சென்னையில் உள்ள முதன்மை தலைமை கணக்காயர் அலுவலகம் நடத்தியது.
அரசியல் சட்டத்தின் 151 பிரிவு 2 தமிழ்நாடு அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கைகளை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி மாநில சட்டப்பேரவையில் அதனை சமர்ப்பிக்கும் வகையில், ஆளுநரிடம் வழங்க அரசியல் சட்டத்தின் 151 பிரிவு 2 வகை செய்கிறது.
சென்னையில் உள்ள முதன்மை தலைமை கணக்காயர் திரு ஆர் அம்பலவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு இதனை தெரிவிக்கிறது
கருத்துகள்