தமிழ்நாடு அரசின் பள்ளிகல்விதுறை அனைத்து வகையில் செயல்படும் பள்ளிகளுக்கு புதிய சுற்றறிக்கை வெளியீடு.
முதலாவதாக: பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (சிஇஓ) கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இரண்டாவதாக : சிஇஓ-வின் அனுமதி பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் ஊடகங்களுக்கு சிஇஓ அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது.
மூன்றாவதாக: பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தால், சிஇஓ-க்கு முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும். நான்காவதாக: மரத்தடியில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக்கூடாது.
ஐந்தாவதாக: சத்துணவு தரமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுகிறதா என்பதை தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆறாவதாக: பேருந்து மேற்கூரையின் மீது அமர்ந்து மாணவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் உரிய அறிவுரைகள் மாணவர்களுக்கு"வழங்கப்பட வேண்டும்.
ஏழாவதாக: பணியாளர்கள் அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளிக்கு வந்துவிட வேண்டும்.
எட்டாவதாக: ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது.
ஒன்பதாவதாக: மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைக்காக பள்ளியை விட்டு வெளியே அனுப்பக் கூடாது.
பத்தாவதாக: ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும் முன், Movement Register-இல் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்
மேலும் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டுமெனவும் இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்