இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவின் அலரிமாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட உயிருக்கு பயந்த பிரதமர் அஞ்சி ஓடிய நிலையில் பதவியிலிருந்து விலகவே மாட்டேன் என அடம்பிடித்த ராஜபக்ச வேறு வழியின்றி பதவியை ராஜினாமா செய்தார்.
சரியாகச் சொன்னால் மக்கள் அவரை பதவியை ராஜினாமா செய்ய வைத்த நிலையில் இலங்கையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நடத்தும் ஒரு ஆட்சி அமைந்தது. பிரதமராக ரணில் விக்கிரமதுங்கவும் ஏற்கெனவே கோத்தபய அரசில் பதவி விலகிய அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்களும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய பிரதமர் ரணில் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிமித்த பல முயற்சிகள் செய்து பார்த்தார்.ஆனால் கை கூடவில்லை. இதனால் பொங்கி எழுந்த மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். அவர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்த பல முயற்சிகள் செய்தும் பலனில்லை. அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.அதிபர் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் சோப்பு போட்டு குளிப்பது, சமையல் அறையில் உணவு சமைத்துச் சாப்பிடுவது, அங்குள்ள அறையை சுற்றிப் பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர்.
மேலும் அதிபர் மாளிகையில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தையும் விட்டு வைக்கவில்லை அதிபர் மாளிகையிலுள்ள ஒரு ரகசிய வீட்டையும் போராட்டக்காரர்கள் சுற்றிப் பார்த்தனர். அது பாதாள ரகசிய வீடு என்பதும் போர் சமயத்தில் அவசரத்திற்காக பயன்படுத்துவது. இந்த ரகசிய வீடு மிகவும் பெரியதாகவே இருக்கிறது. இதன் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிறது. ஒரு வேளை கோத்தபய இங்கிருப்பார் என நினைத்துத் தேடினார்களா எனத் தெரியவில்லை. ஆனால் மக்கள் திரண்டு எழுச்சியால் இலங்கை ஆட்சியாளர்கள் அதிர்வில் உள்ளனர்.கோத்தபய ராஜபக்சே வீட்டு லாக்கரை அங்கிருந்த பொதுமக்கள் திறந்தனர். அவரின் வீட்டுப் படுக்கை அறைக்குள் நுழைந்த பின் அதிலிருந்த பெரிய லாக்கரை போராட்டகாரர்கள் திறந்தனர்.
பெரிய பூட்டிருந்த லாக்கரை போராட்டக்காரர்கள் அங்கிருந்த கம்பியை வைத்து உடைத்தனர். உள்ளே குவியல் குவியலாக பணம் இருந்துள்ளது. கட்டு காட்டாக
இலங்கை ரூபா மற்றும் அமெரிக்க டாலர் உள்ளே இருந்ததை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதை உள்ளேயே வைத்து எண்ணியிருக்கிறார்கள். லைவ் வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்து அப்படியே எண்ணி உள்ளனர். உள்ளே பல கட்டுகள் இருந்த நிலையில், அதை பொறுமையாக எண்ணி இருக்கிறார்கள். இதை அவர்கள் எடுத்து செல்லாமல் அந்த பணத்தை அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் போராட்டக்காரர்கள் பணத்தைக் கொடுத்தனர். போராட்டக்காரர்கள் அந்த பணத்தில் இருந்து ஒரு ரூபா கூட எடுக்காமல் அப்படியே காவலர்களிடம் திருப்பிக் கொடுத்தனர். போராட்டக்காரர்களின் இந்த செயல் பலரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
கருத்துகள்