உழவர் ரயில் திட்டம் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட உழவர் ரயில் சேவை,
கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வரை 2,359 உழவர் ரயில் சேவைகளை ரயில்வே இயக்கியுள்ளது. வெங்காயம், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு, மாம்பழம், திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, சப்போட்டா, எலுமிச்சை, குடமிளகாய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் உள்ளிட்ட அழுகும் பொருட்களை சுமார் 7.9 லட்சம் டன்கள் வரை ஏற்றிச் சென்றுள்ளது.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் நிலையங்கள், ரயில்களில் சேவைகள் ஆகியவற்றில் மாற்றம் மற்றும் முன்னேற்றம்
ரயில் நிலையங்களை நவீனப்படுத்தி மேம்படுத்துவது ஒரு தொடர் நடைமுறையாகும். தற்போது ஆதர்ஷ் ரயில் நிலைய திட்டத்தின் அடிப்படையில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல், ரயில் நிலைய கட்டடங்களின் முகப்புகளை மாற்றியமைத்தல், குளிக்கும் வசதியுடன் ஓய்வு அறைகளை மேம்படுத்துதல், பெண்களுக்கு என தனி ஓய்வு அறைகளை அமைத்தல், கணினி வசதி, கட்டணக் கழிப்பறைகள், குளிர்நீர் வசதிகள், ரயில் நிலையங்களில் நுழைவு வாயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக சாய்தள வசதிகள் செய்தல் போன்றவை இதில் அடங்கும்.
மேலும், ரயில் நிலையங்களை மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் ஆகியவற்றுடன் நவீனப்படுத்துவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமையல் அறைகளை மேம்படுத்துதல், ஆன்லைன் மூலம், பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போதே உணவுக்கான ஆர்டரையும் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயணிகளுக்கு தரமான, சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், நாள் ஒன்றுக்கு சுமார் 9.30 லட்சம் லிட்டர் ரயில் நீர் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ரயில் நிலையங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்ரயில் நிலையங்களில் விளம்பரங்கள்
பயணக் கட்டணம் தவிர்த்த பிற வருவாய்களை உருவாக்கும் வகையில், ரயில் நிலையங்களில் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை / வணிக முத்திரை பெயர்களை ரயில் நிலையங்களின் பெயர்களுக்கு முன்போ, பின்போ பொறிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இது விளம்பரத்திற்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறதே தவிர ரயில் நிலையத்தின் பெயரை மாற்றும் நோக்கம் கொண்டதல்ல.
இந்த வகையில், கொல்கத்தா மெட்ரோ திட்டத்தில் 11 ரயில் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த ரயில் நிலையத்திற்கும் இந்த அனுமதி வழங்கப்படவில்லை.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு
காவல்துறை, பொது ஒழுங்கு ஆகியவை இந்திய அரசியல் சாசனத்தில் 7-வது அட்டவணையின் கீழ், மாநிலங்களின் கீழ் வருகிறது. அதனால் சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், குற்றச்செயல்கள் குறித்த புலன்விசாரணை, பதிவு செய்தல், கைது நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பாகும்.
ரயில்வே காவல்துறை போன்ற சட்ட அமலாக்க முகமைகளின் வழியாக பாதுகாப்பை ரயில்வே பராமரித்து வருகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை பயணிகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதன்படி ரயில்களில், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் பயணிகளுக்கான பாதுகாப்புத் தொடர்பான உதவி எண் 139, 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளில், ஆண் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் ரயில்வே, பயணிகளுடன் தொடர்பில் உள்ளது. குற்றச்செயல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அடிக்கடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 5,882 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அடிப்படை மருத்துவ வசதிகளும் சில ரயில்களில் செய்யப்பட்டு பயணிகளுக்கு உதவி வருகிறது.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்