மகளிருக்கு இலவச சணல் தயாரிப்பு பயிற்சி
தேசிய சணல் வாரியம் சார்பில் பெண்களுக்கு சணல் தயாரிப்பு குறித்து இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தேசிய சணல் வாரியத்தின் சென்னை அலுவலக துணை இயக்குனர் திரு. அய்யப்பன் தெரிவித்துள்ளார்.
தேசிய சணல் வாரியம் சார்பில் ராணுவ அதிகாரிகளின் மனைவிகளுக்கான சணல் தயாரிப்பு பயிற்சி சென்னையை அடுத்த ஆவடியில் இன்று நடைப்பெற்றது. இதில் ராணுவ அதிகாரிகள் குடும்ப நல சங்கத்தின் தலைவி சோனம் சோலன்கி, நிலைய கமாண்டர் கர்னல். பூபேந்தர் சோலன்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராணுவ அதிகாரிகளின் மனைவிகளுக்கு வேலைவாய்ப்பை உயர்த்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் 25 மகளிர் கலந்து கொண்டனர். அடிப்படை பயிற்சி மற்றும் டிசைன் பயிற்சி என 28 நாட்களுக்கு இந்த பயிற்சி நடைபெற உள்ளது.
இது பற்றி தேசிய சணல் வாரியத்தின் சென்னை அலுவலக துணை இயக்குனர் திரு. அய்யப்பன் கூறுகையில், சணல் தயாரிப்பில் ஆர்வமுள்ள தையல் தெரிந்த பெண்களுக்கு சணல் தயாரிப்பு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும், இதுகுறித்து தேசிய சணல் வாரியத்தின் சென்னை அலுவலகத்தை 9444459448 என்ற எண்ணிலோ, njbsouthzone@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறினார்.
கருத்துகள்