மாவட்ட ஆட்சியர் மஞ்சுநாத் வழக்கில் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் மூன்று நாட்கள் விசாரணை ஒத்திவைக்க உத்தரவு
ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்த வழக்கின் விசாரணையை கூடுதலாக 3 நாட்கள் ஒத்திவைக்ககோரி உச்சநீதிமன்றம் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்தேசுக்கு கோரிக்கை
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நில பிரச்சனையில் சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக ஒப்பந்த ஊழியர் சேத்தன் மற்றும் துணை வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரிடம் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மஞ்சுநாத் மீதும் இலஞ்சப்புகார் எழுந்தது பற்றி விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே தான் வட்டாட்சியர் மகேஷ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமின்கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சந்தேஷ் விசாரித்தார். இந்த விசாரணையின் போது நீதிபதி சந்தேஷ் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையைக் குறை கூறினார். அதாவது வழக்கு விசாரணையை ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சரியாக மேற்கொள்ளவில்லை எனக்கூறிய நீதிபதி, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச் ஒழிப்புத் துறையின் கூடுதல் டிஜிபி சீமந்த்குமார் சிங்கையும் கடிந்துக் கொண்டார்.இது சர்ச்சையானது. இதற்கிடையே பெங்களூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மஞ்சுநாத் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட தன் தொடர்ச்சியாக
மஞ்சுநாத் ஜாமின் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று நீதிபதி சந்தேஷ் விசாரித்து ஜூலை மாதம் 13 ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார். அப்போதும் சில கருத்துகளைக் கூறினார்.கர்நாடக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஊழல் கறை படியாத அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இதில் தலைமைச் செயலாளர் உரிய கவனம் செலுத்த வேண்டும். ஊழலை ஒழிக்க உருவாக்கப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரிகள் மீது நம்பகத்தன்மை இருக்க வேண்டும். மேலும் ஊழல் தடுப்புத் துறை குறித்து கருத்துத் தெரிவித்ததற்காக இடமாற்ற மிரட்டல் வருகிறது. இதற்கு நான் பயப்படமாட்டேன்'' என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் ஊழல் தடுப்புத் துறையில் கூடுதல் டிஜிபி சீமந்த் குமார் சிங், நீதிபதி சந்தேசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இன்று விசாரணை நடத்தியது.
உச்சநீதிமன்றம் இன்று புதிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி மற்றும் ஹிமா கோலி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில் மேலும் மூன்று நாட்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள்