சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாட்டில் இயங்கும் முதியோர் இல்லங்கள்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவை முதியோர் இல்லங்களை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் உதவிகள் வழங்கப்படுகின்றன. தற்போது 14,890 மூத்த குடிமக்கள் பயனாளிகளைக் கொண்ட 506 முதியோர் இல்லங்கள் இதன் கீழ் பயன்பெற்று வருகின்றன.
இந்த முதியோர் இல்லங்களின் பணித் திறனை அதிகரிக்க, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் மற்றும் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் சுஷ்ரி பிரதிமா பவுமிக் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007-ல் திருத்தம்
பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு (திருத்த) மசோதா, 2019 மக்களவையில் 11.12.2019 அன்று தாக்கல் செய்யப்பட்டது. உடல் ரீதியான அல்லது மன ரீதியான பிரச்சனைகள் காரணமாக வாழ்க்கையின் அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்வதில் சிரமப்படும் மூத்த குடிமக்களுக்கு வீட்டிலேயே சேவை செய்வதை இது உள்ளடக்கி இருந்தது.
சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மாநிலம் சார்ந்த விஷயமாகும். மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூத்த குடிமக்களுக்கான ஒரு தொடர்பு அலுவலருக்கும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு காவல் பிரிவுக்கும் பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு (திருத்த) மசோதா, 2019-ல் வகை செய்யப்பட்டுள்ளது.
முதியோரின் சுகாதார கவனிப்புக்கான தேசிய திட்டத்தில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறைகள் மூலம் இந்தத் திட்டம் முழுமையடைகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பௌமிக் இன்று மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்