ஆக்ராதூத் குழும பத்திரிகைகளின் பொன்விழா கொண்டாட்டங்களைப் பிரதமர் ஜூலை 6-ல் தொடங்கி வைக்கிறார்
ஆக்ராதூத் குழும பத்திரிகைகளின் பொன்விழா கொண்டாட்டங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி 6 ஜூலை 2022 மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைப்பார். ஆக்ராதூத் குழும பொன்விழா கொண்டாட்டக் குழுவின் தலைவரான அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
ஆக்ராதூத் அஸாமிய இருவாரப் பத்திரிகையாக தொடங்கப்பட்டது. அஸ்ஸாமின் மூத்தப் பத்திரிகையாளர் கனக் சென் தோகாவால் நிறுவப்பட்டது. 1995-ம் ஆண்டில் டைனிக் ஆக்ராதூத் என்ற தினசரி செய்தித்தாள் தொடங்கப்பட்டது. இது அஸாமில் நம்பிக்கைக்குரிய மற்றும் செல்வாக்கு பெற்ற செய்தித்தாளாக வளர்ந்தது
கருத்துகள்