"அகவை எழுபதிலும் - இலக்கிய வாழ்வில் பொன் விழா ஆண்டிலும் அடியெடுத்து வைக்கும் கவிப்பேரரசு வைரமுத்துக்கு என் நெஞ்சுக்கினிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
வளமிக்க இலக்கியங்கள் இன்னும் பல படைத்து, பல்லாண்டு தமிழோடு வாழ்க!" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இனியவா்களே!
இலக்கியத்தை சுவாசிக்கிறவா்களே! இனிய மாலை வணக்கம்! கவிப்பேரரசின் பிறந்தநாள்
இந்த வானத்தின் கீழ் வாழ்க்கையின் சில சதுர மைல்களை எனக்கு அறிமுகப்படுத்திய நித்திய ஆத்மா வைரமுத்து !
கரிசல் காட்டுப் பூமியில் தமிழ்த்தாய் கண்டெடுத்த கருப்பு வைரம்!
உலகமெலாம் உலாப்போன குற்றாலத்து மேகம்!
தேசமெலாம் அடித்த தென்காசிச் சாரல்!
வாா்த்தைக்கு ருசி தந்த வரகவி!
கவிதை வரிகளால் காற்று மண்டலத்தையே இனிப்பாக்கினவர்!
காதல் பாடினாய் அது இளமையின் தேசிய கீதமானது!
சோகம் பாடினாய் அது ஆயிரம் கண்ணீருக்கு ஆறுதலானது!
மெல்லிய பிரதேசங்களில் படுத்திருக்கின்றன உன் பாடல்கள்! தலைப்புகள் தந்தன
உன் சரணங்கள்! பேசும்போது கம்பன் தன் கல்லறையில் எழுந்து உட்காா்ந்த
"பொன் மாலைப்பொழுது" என்ற இந்தப்பாடல் எப்போது இந்த வாயு மண்டலத்தை வளைத்துப் போட்டதோ அப்போதே வைரமுத்துவின் பெயா் இதயத்தில் எடுக்க முடியாத பிரதேசத்தில் விழுந்துவிட்டது!
அந்த பாடல் பலருக்கு எறிந்த கல்லின் அலைகள் என் இதயக் கூரைகளில் இந்த நிமிஷம்வரை ஒயவில்லை!
அன்று தொடங்கிய ரசிப்பு, லயிப்பு அறுந்துவிடாத நயாகரா அருவிபோல்இன்றும் தொடா்ந்து கொண்டேயிருக்கிறது!
இருபதாம் நூற்றாண்டில் வோ்விட்டு இருபத்தியோராம் நூற்றாண்டில் விழுதுவிட்டு கொண்டிருக்கும் இந்த மகா கவிஞனை கண்டு மலைத்துப்போகிறேன்!
என் கண்ணின் எதிரே மலையாய் நிமிறுகிறவனை, நதியாய் நடக்கிறவனை,
நட்சத்திரமாய் ஜொலிக்கிறவனைக் கண்டு வியக்கிறேன்!
நீ பிறந்த தேசம் தண்ணீரில் தொலைந்து இருக்கலாம், ஆனால் உன் தண்ணீா் தேசம்
காலத்தில் நிலைத்து நிற்கும்! நிகழ்காலத் தமிழின் ,தமிழனின் அடையாளம் !
கலையும், கலைஞா்களும் வற்றிவிடாமல் இருப்பதால்தான் இந்த வறண்ட நூற்றாண்டுகளிலும்
இன்னும் ஈரமிருக்கிறது! உங்கள் ஊற்றுப்பேனா
வற்றிவிடாமல் என்றும் எழுதிக் கொண்டேயிருக்கட்டும்!
நோக்கமெல்லாம் நோபலை நோக்கி இருக்கட்டும்!
உங்கள் உரைநடையும்,கவிதைகளும் இலக்கிய வரலாற்றில் கிழிக்க முடியாத பக்கங்களில் அழிக்க முடியாமல் எழுதப்படும்!
உங்களுக்கு வெற்றிமாலை சூட்டுவதற்கு ஜெயதேவதை புதிய பூச்செடிகளுக்கு நீா் ஊற்றிக் கொண்டிருக்கிறாள்!வடுகப்பட்டி வைரமுத்தே
எங்கள் இலக்கிய உலகின் சொத்தே
எம்தமிழுக்கே அதிசயம் சேர்க்கும் வித்தே
எங்கள் உடலுக்கே உம் கவிதைதான் சத்தே ...
கவியரசும் நீரே! கவிப்பேரரசும் நீரே!
காப்பிய பேரறிஞரும் நீரே!
காப்பியசாம்ராடும் நீரே ....
இந்த நாள்,இனிய நாள்,
ஏன்னென்றால் இந்நாள அகவை திருநாள் ...தமிழரின் பூச்செண்டும் நீயே! பகைக்கு
தமிழரின் அணுகுண்டும் நீயே!
பொன் தமிழை புடம் போட்டாய்!
கண் தமிழை உலக வீதியில் வடம் போட்டாய்!
பொன்மாலை பொழுதின் பிறப்பு
உன்னால் மொழிக்கு உலக அரங்கில்
சிறப்பு! தமிழின் பிறந்தநாள்அதன் பெயர் வைரமுத்து...
தமிழ் பாடலின் உச்சம் தொட்டவனுக்கு இன்று பிறந்தநாள்!
தமிழினை தன் பாடல் வரிகளால்
தங்கத் தாம்பாளம் ஏந்தியவனுக்கு இன்று பிறந்தநாள்!
பாமரனையும் பாடவைத்த நிகழ்காலக் கம்பனிவர்..
தமிழினை மூச்சாகத் தமிழினைப் பேச்சாக
தமிழினை உலகெங்கும் கொண்டு சேர்த்ததில் உங்களுக்கொரு பங்குண்டு!
வைரமுத்துப் பாடலென்றால் அதைக் கேட்பவருக்கும் மயங்கவைக்கும் ஒரு பாங்குண்டு அத்துணை போதை...
உங்கள் பாடலில்... எங்கள் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்.... எங்கள் தேசத்துக்கு கிடைத்த தமிழின் பெரும்பாண்மை, எங்கள் தேசியச் சொத்து.. அதன் பிரதிபலிப்பே..
வைரமுத்து! என்ற பலரது வாழ்த்துக்களுடன் நாமும் இணைந்து இதழ் சார்பில் வாழ்த்துக்கள்
கருத்துகள்