பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா'வின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட ஆறு நபரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது
டாடா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற வழக்கில், மத்திய அரசின் 'பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா'வின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட ஆறு நபரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ளதன் நிர்வாக இயக்குனராக, பி.எஸ்.ஜா பதவியில் இருப்பவர், தனியார் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு தனிப்பட்ட சலுகை அளித்ததாகக் குற்றச்சாட்டு வந்த நிலையில் நிா்வாக இயக்குநா் பி.எஸ்.ஜா மற்றும் டாடா அதிகாரிகள் ஐவரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.
மத்திய எரிசக்தித் துறையின் கீழுள்ள பவா் கிரிட் பொதுத்துறை நிறுவனம், ஹரியாணா மாநிலம் குா்கான் தலைமையிடமாகும். மாநிலங்களுக்கிடையே மின்சாரப் பரிமாற்றம் செய்யும் பணியைச் செய்கிறது.
அதன் நிா்வாக இயக்குநா் பி.எஸ்.ஜா, பல மின்சாரத் திட்டங்களில் டாடா நிறுவனத்துக்கு விதிமுறைகள் மீறி முன்னுரிமை அளித்ததாகவும், அதற்குப் பிரதிப்பிரயோஜனமாக லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது அவா் அருணாசலப் பிரதேசத்தில் தலைநகா் இட்டாநகரில் பணியில் உள்ளவரை சிபிஐ அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கண்காணித்த நிலையில், உத்திரப்.பிரதேசம் காஸியாபாத், நொய்டா, ஹரியானாவின் குருகிராம் ஆகிய இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை நடத்தினர்.
கருத்துகள்