கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதி தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவி மர்மமாக உயிரிழந்து குறித்து காவல்துறை விசாரணை இரு ஆசிரியர்கள் கைது
.வேப்பூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டி பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்த நிலையில் சம்பவம் குறித்து தகவல் வருமாறு அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி மாணவி பள்ளியின் வளாகத்தில் கீழே விழுந்த நிலையில் கட்டப்பட்ட துணியுடன் கிடந்துள்ளார். இதனைக் கண்ட விடுதியின் காப்பாளர் மாணவியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில். பின்னர் அம்மாணவியின் உடல் பிரத பரிசோதனைக்காக ஆய்வு கூடத்தில் வைக்கப்பட்டதாகத் தகவல். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பக்கம் கணியாமூர் புறவழிச் சாலையில் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு கணித அறிவியல் பிரிவில் படித்து வரும் கடலூர் மாவட்டம் வேப்பூர் பக்கமுள்ள பெரிய நசலூர் கிராமத்தைச் சேர்ந்த இராமலிங்கம் மகள் ஸ்ரீமதி பள்ளியின் விடுதியில் தங்கி படித்த
மாணவி மர்ம மரணம் காரணமாக சம்பவ இடத்திற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி நேரில் சென்று, ஸ்ரீமதியுடன் படிக்கும் சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு பள்ளியிலுள்ள சிசிடிவி பதிவு காணொளிக் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டக காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமாரும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தனது மகளின் இறப்பில் சந்தேகமிருப்பதாகவும் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மர்மமான முறையில் இறந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அம்மாணவியின் பெற்றோர்கள் மற்றம் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெற்றோர் மற்றும் உறவினர்களின் போராட்டத்தையடுத்து கணித ஆசிரியர் மற்றும் வேதியியல் ஆசிரியை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள்