சமூக நிதி மற்றும் அதி
காரமளித்தல் அமைச்சகம் ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான சமூக அதிகாரம் அளித்தல் முகாம்
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மற்றும் உபகரணப் பொருட்கள் அளிப்பதற்கான சமூக அதிகாரமளித்தல் இயக்கம் ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள மெதினி நகரில் 8.7.2022 அன்று நடைபெறவுள்ளது.
பல்வேறு வகைகளாக ரூ.115.72 லட்சம் மதிப்பிலான மொத்தம் 1628 உதவி மற்றும் உபகரண கருவிகள் அளிக்கப்படவுள்ளன. பலமு மாவட்டத்தைச் சேர்ந்த 1014 மாற்றுத்திறனாளிகளுக்கு இப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன. இந்தநிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பிரதீமா பவுமிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைக்கவுள்ளார்.
கருத்துகள்